சென்னை, மே 30 –
துறைமுகத்தில் பணிபுரி யும் இளநிலை பொறியா ளர்களுக்கு உடனடியாக பணி நிரந்தரமாக்கக் கோரி, சென்னை துறைமுகம் முன் பாக புதனன்று (மே 30) ஆர்ப் பாட்டம் நடைபெற்றது.
சென்னை துறைமுகத்தில் சிவில் பிரிவில் 1996 ஆம் ஆண்டு முதல் இளநிலை பொறியாளர்களாக சுமார் 115 பேர் பணியில் அமர்த் தப்பட்டனர். இதில் 65 பேர் 15 ஆண்டு காலத்திற்கு மேல் நிரந்தரப்படுத்தப்படாமல் இருக்கின்றனர். இது குறித்து பல முறை துறைமுக நிர் வாகத்திடமும், அரசிடமும் புகார்களை தெரிவித்தும் எவ்வித பயனுமில்லை என்று போராட்டத்தில் தெரிவிக் கப்பட்டது.சில சுற்றறிக்கைகளைக் காரணம் காட்டி தற்போது இவர்களை, பணி நீக்கம் செய்ய வாய்ப்பு இருப்பதாக வும் அச்சம் தெரிவிக்கப்பட் டது.இளநிலை உதவியாளர் களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என ஆர்ப்பாட் டத்தில் வலியுறுத்தப்பட் டது.
இந்த போராட்டத்திற்கு மெட்ராஸ் போர்ட் மற்றும் டாக் எம்ப்ளாயீஸ் யூனியன் (சிஐடியு) துணை தலைவர் கே.கோவிந்தராஜன் தலைமை தாங்கினார். அகில இந்திய நீர்வழி போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஆர். கிருஷ்ணமூர்த்தி, செயலா ளர் தி.நரேந்திரன் உள்ளிட் டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இள நிலை பொறியாளர்கள், உதவியாளர் என ஏராளமா னோர் இதில் கலந்து கொண் டனர்.

Leave A Reply