சென்னை, மே 30 –
கார்போன் மொபைல்ஸ் நிறுவனம் இரண்டாம் தலைமுறை மெசேஜ் தீர்வை களுடன் கூடிய கார்போன் கே டி-21 எக்ஸ்பிரஸ் என்ற புதிய செல்போனை அறிமுகம் செய்துள்ளது.கார்போன் கேடி- 21 எக்ஸ்பிரஸ் போன் தொடு திரை (டச்) மற்றும் கீ பேடுகளுடன கூடிய என இரு வகை களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஸ்மார்ட் மெயில்- கார்போன்ஸ் புஷ் மெயில் எக்ஸ்பிரஸ் சேவை மற்றும் கார்போன் இன்ஸ்டன்ட் மெசஞ்சர் சேவையும் (கேஐஎம்) இதில் உள்ளது. கார்போன் மொபைல் போன் வாடிக்கையாளர்கள் தங்களது ஈ மெயில்களை கார்போன் புதிய போன் மூலமாக அனுப்பவும் பெறவும் முடி யும். மேலும் மிகவும் பாதுகாப்பாக தங் களது தனிப்பட்ட மற்றும் அலுவலகம் சார்ந்த மெயில்களை அனுப்பமுடியும். குரல் ஒலியை பதிவு செய்து மெசேஜூ டன் அனுப்பும் வசதியும் உள்ளது. இதன் விலை ரூ.4490என்று நிறுவனத் தின் நிர்வாக இயக்குநர் ஷாஷின் தேவ்சாரே கூறியுள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: