அறந்தாங்கி, மே 30-பெட்ரோல் விலை உயர் வைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆவு டையார் கோவில் தாலுகா குழு சார்பில் ஒக்கூர் முக்கத்தில் தெருமுனை பிரச்சாரம் நடை பெற்றது. ஒன்றியச் செயலாளர் சி.சுப்பிரமணியன் தலைமை வகித்து பேசினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே. செல்வராஜ் கண்டன உரை யாற்றினார். தாலுகா குழு உறுப் பினர்கள் வே.வீரய்யா, பி. காசி, வி.கணேசன், எஸ்.அழகர், பி. சின்னச்சாமி, எஸ்.சபரிநாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: