குடியாத்தம், மே 30-
வேலூர் மாவட்டம் குடி யாத்தம் தனியார் மெட்ரிக் பள்ளிகளில் தமிழக அரசின் கல்விச்சட்டம் பெயர ளவில் கூட நடைமுறையில் இல்லை. இந்த ஆண்டுக்கான சேர்க்கை, கல்விக்கட்ட ணம் குறித்து நகரத்தில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளிக ளின் நிலையைக் கடந்த ஒரு வாரமாகக் கண்காணித்த தில் அதிர்ச்சியான தகவல் கள் கிடைத்தன. யுகேஜி சேர்க்கைக்கு நேஷனல் பள் ளியில் ரூ.12 ஆயிரம், செயின்ட் ஜான்ஸ் பள்ளி யில் 5 ஆம் வகுப்புக்கு ரூ.15ஆயிரத்து 500, செவன்த் டே, திருவள் ளுவர் மேல்நிலைப்பள்ளி, நேஷனல் பள்ளி, கிர சென்ட், லிட்டில் ஃபிளவர், ஜோதி, வள்ளலார் போன்ற மெட்ரிக் பள்ளிகளில் ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை ரூ. 25ஆயிரம் என் றால் பத்துமுதல் 12ம் வகுப்பு களுக்கு எவ்வளவு கட்ட ணம் இருக்கும் என்று சொல் லத் தேவையில்லை.
இதுகுறித்து செயின்ட் ஜான் மெட்ரிக் பள்ளி முதல் வர் ரெவரன் ஜெயக் கொடி யிடம் கேட்ட போது, கிராமப்புற ஏழை மாணவ, மாணவிகளின் கல்வி தடை படக்கூடாது என்பதற்காக குறைந்த நன்கொடையை பெறுவதாக கூறிக் கொண்டார்.கட்டிட வசதி, ஆசிரியர் களுக்கு வழங்கப்படும் ஊதி யம், பள்ளி பராமரிப்பு, கூடுதல் பாடப்பிரிவுகளை ஏற்படுத்தி கல்வி கற்பிப்ப தால் ஏற்படும் செலவினங் களை சரிகட்ட அதிக கல் விக் கட்டணத்தைப் பெறு வதாக மேலும் சில தனியார் பள்ளி நிர்வாகிகள் கூறி னார். எது எப்படியோ? கல்வி தொழில் இன்றைக்கு பெரும் லாபம் கொழிக்கும் தொழிலாக மாறியுள்ளதால் பாதிக்கப்படுவோர் என்ன வோ ஏழை எளிய நடுத்தர மக்கள் தான்.

Leave A Reply

%d bloggers like this: