சென்னை, மே 30-டெங்கு காய்ச்சலை தடுக்க மத்திய -– மாநில அரசுகளின் போர்க்கால நடவடிக்கை தேவை என்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத்தி யுள்ளது. இது தொடர்பாக சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் சுகந்தி விடுத் துள்ள அறிக்கையில் கூறி யிருப்பதாவது:-தமிழகத்தில் கடந்த 2 மாதங்களாக டெங்கு காய்ச் சல் பரவி வருகிறது. நெல் லையை தொடர்ந்து தூத் துக்குடி, விருதுநகர், கோவை, மதுரை என தமி ழகத்தில் பல மாவட்டங் களில் வேகமாக பரவி வரு கிறது. இதுவரை 39 பேர் பலியாகியுள்ளனர். இதில் பெரும்பாலும் குழந்தை களே உயிரிழந்துள்ளனர். 300க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனு மதிக்கப்பட்டுள்ளனர்.மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் காந்திச் செல்வன், மாநில அரசு, மத் திய அரசிடம் உதவி கோரி னால் மருத்துவ உதவிகளை செய்யத் தயார் என அறிவித் துள்ளார். மாநில அரசும் இதுவரை மத்திய அரசிடம் எந்த உதவியையும் கோர வில்லை.
அப்பாவி மக்களின் இத்தகைய உயிர்ப்பலிக்கு மத்திய -– மாநில அரசுகளின் இத்தகையப் போக்கு ஏற்பு டையதல்ல. எனவே உடன டியாக மத்திய –- மாநில அர சுகள் இணைந்து போர்க் கால அடிப்படையில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத்துகிறது. மேலும் மத்திய அரசின் நவீன தாராளமயக் கொள் கையால் சுகாதாரத்துறை யில் காலியாக உள்ள பணி யிடங்கள் நிரப்பப்படாத நிலை உள்ளது. கொசு ஒழிப்புக்கு பயன்படுத்தப் படும் ஊழியர்கள் கூட தினக்கூலிகளாகவே உள்ள னர். 10,000 மக்கள் தொகைக்கு ஒரு சுகாதார ஆய்வாளர் என்ற விதிமுறைக்கு மாறாக 30,000 பேருக்கு ஒரு சுகா தார ஆய்வாளர் என்ற நிலையே உள்ளது. ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஒவ் வொன்றிலும் இரத்த பரி சோதனை செய்யும் ஊழியர் கள் இருக்க வேண்டும், 80 சதவிகித ஆரம்ப சுகாதார நிலையங்கள், உபகரணங் கள் இருந்தும் அதற்குரிய ஊழியர்கள் இல்லை.இதனால் தனியார் மருத் துவமனைகளின் எண் ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. டெங்கு காய்ச்சலால் பாதிக் கப்பட்டவர்களுக்கு தேவைப்படும் இரத்தம் கூட தனியார் இரத்த வங்கிகளால் அதிக விலைக்கு விற்கப்படு கிறது. எனவே மத்திய – மாநில அரசுகள் டெங்கு காய்ச்சல் குறித்து ஆய்வு செய்தால் மட்டும் போதாது. சுகா தாரத்திற்கான இட ஒதுக்கீட்டை அதிகரித்து ஊழியர்கள் நியமனம் உத் தரவாதப்படுத்தப்பட கூடு தல் முயற்சி எடுக்க வேண்டும்.மத்திய-மாநில அரசுகள் இணைந்து போர்க்கால அடிப்படையில் டெங்கு காய்ச்சலை தடுத்து நிறுத்த வும், மக்கள் மத்தியில் டெங்கு காய்ச்சல் குறித்து பீதியை குறைக்க விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற் கொள்ளவும் மத்திய – மாநில அரசுகளை ஜனநாயக மாதர் சங்கம் கேட்டுக் கொள்கிறது.

Leave A Reply

%d bloggers like this: