பிரபல டென்னிஸ் ஆட்ட நாயகி செரினா வில்லியம்ஸ் முதல்முறையாக முதல் சுற்றில் அதிர்ச்சி தோல்வியடைந்தார். பிரான்ஸ் ஆட்டக்காரர் வர்ஜினி ரஸ்ஸானோ அவரை 4-6, 7-6(5) 6-3 என்ற செட்டுகளில் தோற்கடித்தார்.முதல் செட்டை வென்ற செரினா, இரண்டாவது செட்டில் கடுமையான சவாலைச் சந்தித்தார். செட் டைபிரேக்கர் சென்றது. அதில் செரினா 5-1 என முன்னிலையில் இருந்தார். ஆனால் ரஸ்ஸானோ தொடர்ந்து ஆறு புள்ளிகளை வென்று 7-5 என செட்டை வென்றார். மூன்றாவது செட்டை ரஸ்ஸானோ சிரமமின்றி வென்று, இரண்டாவது சுற்றில் நுழைந்தார்.கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ள மரியா சரபோவா, பெடரர் கேவிட்டோவா, பிரான்சிஸ்கா சியாவோன் ஆகிய மூவரும் இரண்டாவது செட்டில் நுழைந்துள்ளனர்.
பிரெஞ்ச் ஓபன் பட்டத்தை இதுவரை வெல்லாத சரபோவா 6-0, 6-0 என 48 நிமிடங்களில் சைமன் பொலேல்லியை தோற்கடித்தார். போட்டியில் நான்காம் நிலை பெற்றுள்ள விம்பிள்டன் சாம்பியன் பெட்ரா கேவிட்டோவா 6-1, 6-2 என்று 54 நிமிடங்களில் ஆஸி. நங்கை அஸ்லே பார்ட்டி தோற்கடித்தார். 2010 பிரெஞ்ச் சாம்பியன் பிரான்சிஸ்கா சியாவோன் ஜப்பானின் மூத்த வீராங்கனை கிமிகோ டேடே கிரம்ன் என்பவரை 6-3, 6-1 எனத் தோற்கடித்தார். ஆடவர் முதல்சுற்றில் ஆறுமுறை பிரெஞ்ச் ஓபன் பட்டம் வென்றுள்ள ராபெல் நாடல், சைமன் பொலேல்லியை 6-2, 6-2, 6-1 என எளிதில் வென்றார். மகளிர் இரட்டையரில் இந்தியாவின் சானியா மிர்சா- பெத்தானி மாட்டெக் சாண்ட்ஸ் இணை முதல் சுற்றில் 6-3, 4-6, 7-5 என்ற புள்ளிகளில் தோற்றது. இதன் விளைவாக அவர் லண்டன் ஒலிம்பிக் பங்கேற்பில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: