மார்க்சிஸ்ட் கட்சி அரசியல் வகுப்பு
திருவாரூர், மே 30-மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் 20வது மாநாட்டு அரசியல் விளக்க சிறப்பு வகுப்பு திரு வாரூரில் செவ்வாய்க் கிழமை அன்று நடை பெற்றது. மாவட்ட செயற் குழு உறுப்பினர் வி.எஸ். கலியபெருமாள் தலைமை யில் நடைபெற்ற இந்த வகுப்பில் கட்சியின் மாநி லக்குழு உறுப்பினர் ஜி. ஆனந்தன், சில தத்து வார்த்த பிரச்சனைகள் மற்றும் ஸ்தாபனம் குறித்து பேசினார்.இரண்டாம் அமர்வில் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் வி.மாரிமுத்து அரசியல் தீர்மானம் குறித்து விளக்க உரையாற்றினார். மாவட்டச் செயலாளர் ஐ.வி.நாகராஜன் கட்சியின் முன் உள்ள கடமைகள் குறித்து உரையாற்றினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், மாவட் டக்குழு உறுப்பினர்கள், இடைக்கமிட்டி செய லாளர்கள், இடைக் கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் ப்ராக் ஷன் கன் வீனர்கள் மற்றும் உறுப் பினர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

காரைக்காலில் சிபிஎம் – சிபிஐ பிரச்சாரம்
காரைக்கால், மே 30 -பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் காரைக்கால் மாவட்டத்தில் பிரச்சாரம் நடைபெற்றது.காரைக்காலில் நடை பெற்ற பிரச்சாரக் கூட்டத் திற்கு, கட்சியின் காரைக் கால் மாவட்டச் செய லாளர் அ.வின்சென்ட் தலைமை வகித்தார். இந் திய கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்டச் செயலா ளர் ராnஐந்திரன் மற்றும் பார்வர்ட் பிளாக் சார்பில் முகமது பிலால் உள்ளிட் டோர் கலந்து கொண் டனர்.

கத்தியை காட்டி மிரட்டி பைக் திருட்டு
கரூர், மே 30-கரூர் மாவட்டம், மண வாடியை சேர்ந்தவர் பாட்ஷா(36). இவர் கல்லுமடை காலனியில் தையற்கடை வைத்துள் ளார். கடந்த 29.05.12 அன்று இரவு 9மணியள வில் வழக்கம் போல் கடை யில் துணி தைத்துக் கொண்டிருக்கும் போது 26 முதல் 30 வயது மதிக் கத்தக்க இரண்டு பேர் முகவரி கேட்பது போல் பாட்ஷா விடம் விசாரித் துள்ளனர். பின்னர் திடீரென கத்தியை காட்டி மிரட்டி பாட்ஷாவின் டூவிலரை யும், செல்போன் மற்றும் ரூ.2 ஆயிரத்தை பறித்துக் கொண்டு தப்பினர். இது பற்றி வெள்ளியணை காவல் நிலையத்தில் பாட் சா புகார் தெரிவித்தார். அதன்பேரில் வெள்ளி யணை போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர் களை தேடி வருகின்றனர்.

ஆட்டோ தொழிலாளர் இன்று வேலைநிறுத்தம்
நாகர்கோவில், மே 30-குமரி மாவட்ட அனைத்து ஆட்டோ தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் குமரி மாவட்ட மோட்டார் ஒர்க்கர்ஸ் யூனியன் நிர்வாகிகள் கூட் டுக்குழு கூட்டம் நாகர் கோவிலில் உள்ள சிஐடியு தொழிற்சங்க அலுவலகத் தில் நடந்தது. கூட்டத்துக்கு கூட்டுக் குழு ஒருங்கிணைப்பாளர் சிவகோபன் தலைமை தாங்கினார். பெட்ரோல் விலை உயர்வை மத்திய அரசு வாபஸ் பெற வலி யுறுத்தி நடைபெறும் வேலை நிறுத்தத்துக்கு ஆதரவு தெரிவித்து, குமரி மாவட்டத்தில் உள்ள ஆட்டோ மற்றும் மோட் டார் வாகனங்கள் அனைத்தையும் 31-ம் தேதி காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை ஓட் டாமல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடு வது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Leave A Reply

%d bloggers like this: