வங்கதேச, இந்திய தூதர்கள் திரிபுரா வருகை
அகர்தலா, மே 30-புதுதில்லியில் உள்ள வங்கதேசத் தூதரும், டாக் காவில் உள்ள இந்தியத் தூதரும் இருநாடுகளின் வர்த்தகம் தொடர்பான விஷயங்களை ஆய்வு செய்ய, ஜூன் 5 அன்று திரி புரா வருகின்றனர் என்று தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ஜிதேந்திர சௌதுரி கூறினார்.டாக்காவில் உள்ள இந்திய தூதர் பங்கஜ் சரண், தில்லியில் உள்ள வங்க தேசத் தூதர் தாரிக் ஏ.கரீம் ஆகிய இருவரும் ஜூன் 5ல் அகர்தலாவில் சந்திப்பார் கள். அவர்கள் தெற்கு திரி புராவின் எல்லையில் உள்ள சப்ரூம் நகருக்கும், வங்கதேசத்தில் சிட்டகாங் கோட்டத்தில் உள்ள ராம் காருக்கும் இடையில் பெனி நதி மீது கட்டப்பட்டு வரும் பாலவேலை குறித்து விவாதிப்பார்கள்.இருநாடுகளும் அனு மதி அளித்துள்ள நான்கு எல்லைச்சந்தைகளை திறப்பது பற்றியும் நிலச் சுங்கச்சாவடிகள் விதிகள் குறித்தும் இருவரும் விவா திப்பார்கள். 1996ல் சப்ரூ மில் இருந்த நிலச் சுங்கச் சாவடி மூடப்பட்டது. மத் திய அரசு அதைப்பின்னர் திறக்க உத்தரவிட்டது.இரு தூதர்களும் சந் தித்தபின் இரு நாடுகளின் உயர்மட்டக்குழு அகர் தலா வரும் என்றும், புதிய சுங்கச்சாவடிகள் அமை யும் இடம் குறித்தும், வர்த் தகம் தொடர்பான பிற விஷயங்கள் பற்றியும் அவர் கள் முடிவு செய்வார்கள் என்றும் அமைச்சர் ஜிதேந் திர சௌதுரி கூறினார்.

ஆந்திராவில் புகையிலை இல்லா கிராமம்
ஹைதராபாத், மே 30-உலக புகையிலை தின மான மே 31 அன்று ஆந்தி ராவில் உள்ள சிறிய கிராம மான பொங்கலிபகா புகை யிலை இல்லா கிராமம் என அறிவிக்கப்படவுள்ளது.மதுகுலா வட்டத்தைச் சேர்ந்த இக்கிராமம் தலை நகரில் இருந்து 48 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்கு 1632 பேர் வாழ்கின் றனர். இந்திய பொது சுகா தார பவுண்டேஷன் மற் றும் இயற்கை ஆகிய இரு அமைப்புகள் முன்கையெ டுத்து இதனைச் சாதித் துள்ளன.இதற்கான முயற்சிகள் சென்ற ஆகஸ்ட் 15ல் தொடங்கப்பட்டது என்று பொங்கலிபகா கிராமத் தலைவர் யு டேமுடு என். சத்யநாராயணா கூறினார். புகையிலை மற்றும் கைய்னி, குட்கா பயன்படுத்த கிரா மத்தில் அனுமதி மறுக்கப் பட்டது. புகையிலை மெல் லுதல், புகைப்பிடித்தல், கைய்னி, குட்கா பயன் படுத்துதல் ஆகிய விதிமு றை மீறல்களுக்கு கடுமை யான அபராதம் விதிக்கப் படும் என்று கிராமசபை தீர்மானித்தது.கடைகளில்அவற்றை விற்கக்கூடாது என்று கூறப்பட்டது. கடைகளும் நவம்பர் 1 முதல் விற்பனை யை நிறுத்திவிட்டன. ஜி. கே.வீதி, அனந்தகிரி, பா டேறு, அச்சுதபுரம், சிந்தப் பள்ளி, கொய்யுரு மண்ட லங்களில் உள்ள பத்து கிரா மங்கள் விரைவில் புகை யிலை இல்லா கிராமமாக அறிவிக்கப்படும்.

தீவிரவாதிகள் தாக்குதல்: ஏழு வீரர்கள் காயம்
ஸ்ரீநகர், மே 30-மோட்டார் சைக்கி ளில் வந்த இரு தீவிரவாதி கள் சரமாரியாகச் சுட்ட தில் மத்திய இருப்பு காவல் படையினர் ஏழு பேர் காய மடைந்தனர். அவர்களில் ஒருவர் படுகாயம் அடைந் துள்ளார்.ஸ்ரீநகரின் பழைய நகர் பகுதியில் உள்ள சிராஸ் சினிமா கட்டிடத்தில் உள்ள சிஆர்பிஎப் தலை மையகத்தில் இருந்து சட் டம்-ஒழுங்கு பணியை தொடங்க வெளியேறிய வீரர்கள் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இரு தீவிர வாதிகள் கண்மூடித்தன மாக சரமாரியாகச் சுட்ட னர். இச்சம்பவம் காலை 7.15க்குநடந்தது.

Leave A Reply

%d bloggers like this: