45 நாட்களுக்கு பிறகு மீனவர்கள் கடலுக்கு சென்றனர்
சென்னை, மே 30-45 நாட்கள் மீன்பிடி தடைகாலம் முடிவடைந்து புதனன்று (மே 30) அதி காலை ஆழ்கடலுக்கு மீன வர்கள் மீன்பிடிக்கச் சென்றனர்.தமிழக கடலில் மீன் களின் இனப்பெருக்கத்திற் காக ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15ஆம் தேதி முதல் மே 29ஆம் தேதி வரை 45 நாட்கள் ஆழ்கடலில் மீன் பிடிக்கதடை விதிக்கப்படும். இந்த தடைகாலம் மே 29 ஆம் தேதியுடன் முடிவ டைந்தது.சென்னை காசிமேடு பகுதியில் 3000த்திற்கும் மேற் பட்ட விசைப்படகுகள் உள்ளன. பெட்ரோல் , டீசல் தட்டுப்பாட்டல் அதிக மான விசைபடகு செல்ல முடியாத நிலையில் 1000ம் விசைப்படகுகளுக்குள் மீன்பிடிக்க செல்லலாம் என்று மீனவர்கள் தெரிவித் தனர்.

திட்டமிட்டபடி பள்ளிகள் திறப்பு
சென்னை, மே 30-திட்டமிட்டப்படி ஜூன் 1ஆம் தேதி அரசு பள்ளி களும், 4ஆம் தேதி தனியார் பள்ளிகளும் திறக்கப் படுகிறது. கோடை விடுமுறைக்கு பிறகு ஜூன் 1ஆம் தேதி அரசு உதவி பெறும் பள்ளி களும், தனியார் பள்ளி களும், மெட்ரிக்குலேஷன் பள்ளிகளும் திறக்கப்பட வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.இந்த நிலையில் வெயி லின் உக்கிரத்தால் மக்கள் வெளியில் நடமாடவே அச்சப்பட்டு வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர்.கத்திரி வெயில் முடிந்த பிறகும் சென்னையில் 108 டிகிரி வெயில் பதிவாகியுள் ளது. இதனால் பள்ளிகள் திறப்பது தள்ளி போகுமா? என்ற கேள்வி பெற்றோரி டையே ஏற்பட்டது.இதனிடையே தனியார் பள்ளிக் கூடங்கள் ஜூன் 4ஆம் தேதியும், சி.பி.எஸ்.சி. பள்ளிகள் 18ஆம் தேதியும் திறக்கப்படுகின்றன.இதனால் அரசுப் பள்ளி கள் திறப்பது தள்ளிப் போகுமா? என கேள்வி எழுந்தது. இது குறித்து பள்ளிக் கல்வித்துறை அதி காரி ஒருவர் கூறுகையில், கத் திரி வெயில் முடிவ டைந்து விட்டதால் படிப்படியாக வெயிலின் உக்கிரம் குறை யும் என்று எதிர்பார்க்கி றோம். எனவே திட்டமிட்ட படி ஜூன் 1ஆம் தேதி பள்ளி கள் திறக்கப்படும் என்றார்.

ஜிப்மர் தேர்வு முடிவு 2 நாளில் வெளியீடு: அதிகாரி தகவல்
புதுச்சேரி, மே 30-ஜிப்மர் தேர்வு முடிவு கள் இன்னும் 2 நாளில் வெளியிடப்படவுள்ளது.ஜிப்மர் மருத்துவ கல் லூரியில் எம்.பி.பி.எஸ் படிப் பதற்கான நுழைவு தேர்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்தது.145 இடங்களுக்கான இந்த நுழைவு தேர்வு நாடு முழுவதும் 11 நகரங்களில் 55 தேர்வு மையங்களில் நடை பெற்றது. 29 ஆயிரம் மாணவ- மாணவிகள் நுழைவு தேர்வு எழுதினர்.இது தொடர்பாக ஜிப் மர் மருத்துவ கல்லூரி மருத் துவமனையின் செய்தி தொடர் பாளர் மகேஷ் நிருபர்களி டம் கூறியதாவது:ஜிப்மர் மருத்துவ கல் லூரி எம்.பி.பி.எஸ் நுழைவுத் தேர்வு நடந்து முடிந்து விடைத்தாள்கள் திருத்தும் பணி முழுவீச்சில் நடை பெற்று வருகிறது.தேர்வு முடிவுகள் மே 31 அல்லது ஜுன் 1 தேதிகளில் வெளியிடப்படும். முடிவு களை ஜிப்மர் இணையதளத் தில் அனைவரும் பார்த்து கொள்ளலாம்.இவ்வாறு அவர் கூறி யுள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.