கோவை, மே 30-தமிழகத்தின் தென்மாவட்டங்களில் டெங்கு காய்ச்சலின் தாக்கம் அதிகளவில் உள்ளது. கோவை மாவட்டத்திலும் தற்போது டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. கொசுவின் மூலமும் பிற மாவட்டங்களிலிருந்து கோவைக்கு திரும்புபவர்களிடமிருந்தும் நோய் பரவும் அபாயம் உள்ளது. இதனையடுத்து, நோயை கட்டுப்படுத்தும் வகையில், பல்வேறு நடவடிக்கைகளை சுகாதாரத்துறை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர். கோவை மாநகராட்சி ஆணையாளர் டி.கே.பொன்னுசாமி உத்தரவின் பேரில், மண்டல சுகாதார அலுவலர் குணேசகரன் மேற்பார்வையில் புதனன்று, கோவையில் வீடுவீடாக கொசு மருந்தடிக்கும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் 50 பேர் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்களும், நீரை காய்ச்சிக்குடிக்கவும், வீட்டைச் சுற்றி கொசு உற்பத்தியாகாத வண்ணம் பாத்துக்கொள்ளும்படியும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

Leave A Reply