திருவாரூர், மே 30-திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டம் மணக் கால் அய்யம்பேட்டை கொத்தங்குடி ஆத்தங்கரை தெருவில் தீ விபத்தால் பதினோரு வீடுகள் பாதிக் கப்பட்டன. பாதிக்கப்பட்ட மணி பாண்டியன், கண்ணதாசன், சுப்ரமணியன், பாஸ்கரன், அம்புரோஸ், நீலமேகம், கந்தவேல், சிவராமன், சோமு, வீரமணி ஆகி யோரின் குடும்பங்களை மாவட்ட ஆட்சியர் சி.நட ராசன் நேரில் சென்று சம் பவ இடத்தை பார்வை யிட்டு ஆறுதல் கூறினார்.அப்போது கிராமப் பொது மக்கள் தங்கள் கிராமத்திற்கு தேவையான வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித் தனர். தீ விபத்தில் எரிந்து போன பள்ளி மாணவர் களின் சான்றிதழ்கள், குடும்ப அட்டைகள், பட்டாக்கள் ஆகியவற்றை உடனடியாக வழங்கிட வேண்டும் என வும் கேட்டுக்கொண்டனர். மாவட்ட ஆட்சியர் விரை வான நடவடிக்கை எடுக் கப்படும் என உறுதியளித் தார். மேலும் தீ விபத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தற் காலிகமாக தங்குவதற்கு இடம் மற்றும் குடிநீர் வச திக்கு கைப்பம்பு போன்ற வற்றை அமைத்திட உரிய அலுவலர்களுக்கு உத்தர விட்டார். கொரடாச்சேரி வட் டார ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் மு.அறி வழகன், வட்டாட்சியர் சீனி வாசன், வட்டார வளர்ச்சி அலுவலர் பாஸ்கரன், உள் ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், கிராமவாசி கள் உடன் இருந்தனர்.

Leave A Reply