சென்னை, மே 30-பெட்ரோல் விலை உயர்வை குறைக்கக்கோரி திமுக சார்பில் தமிழகம் முழுவதும் புதனன்று ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுப்பேசிய திமுக தலைவர் கருணாநிதி, பெட் ரோல் விலையைக் குறை யுங்கள், கூட்டணியி லிருந்து விலகும் நிலையை உருவாக்க வேண்டாம் என்று கூறினார். ஆனால் பின்னர் செய்தியாளர் களைச் சந்தித்த அவர், மத் திய ஆட்சியிலிருந்து விலகு வோம் என்று சொல்லவில் லை என்று விளக்கமளித்தார்.சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை அருகில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்தில் பங்கேற்று பேசும்போது,பெட்ரோல் விலை கிட்டத்தட்ட ரூ.7.50 அளவுக்கு உயர்த்தப்பட் டது கொடுமையானது என் றும், விலையை குறைக்க வேண் டும் என்று மத்திய பாதுகாப் புத்துறை அமைச்சர் ஏ.கே. அந்தோணியே கேட்டுக் கொண்டிருக்கிறார் என்றும் குறிப்பிட்டார்.
திமுகவைப் பொறுத்தவரை மத்திய அர சோடு கூட்டணியிலே இருந் தாலும் கூட, கூட்டணி வேறு, அதே நேரத்தில் மக்க ளுக்கு விரோதமான காரி யங்கள் நடைபெறும்போது அதை தடுக்கின்ற நிலையில் செயல்படுவது வேறு, நாங் கள் பாஜகவோடு கூட்டணி யிலே இருந்துகொண்டு – வி. பி.சிங் பிரதமராக இருந்த போது அந்த கூட்டணியில் இருந்துகொண்டு- எந்த இடத்தில் இருந்தாலும் நம் முடைய பிரதான அடிப் படைக்கொள்கைகளுக்கு மாசு வருமேயானால் அதைச் சுட்டிக்காட்டி, அதைத் தீர்க்கக்கூடிய, தீர்த்து வைக் கக்கூடிய பெரும் பொறுப் பை மத்தியிலே உள்ளவர் களுக்கு அளித்து அந்தப் பொறுப்பை அவர்கள் நிறைவேற்றாவிட்டால் எதிர்ப்புக்குரலை உயர்த்தி, அவர்களோடு இருக்கின்ற வரையிலே இருந்து – முடி யாவிட்டால்தான் தனி யாகப் பிரிந்து நம்முடைய கொள்கைகளைத்தான் நாம் வலியுறுத்தி வந்திருக் கிறோம். அதற்கு இடம் தராத வகையில் மத்திய அர சும் மாநில அரசும் நடந்து கொள்ள வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டார்.
பேட்டி
ஆர்ப்பாட்டம் முடிந்த தும் செய்தியாளர்களிடம் பேசிய திமுக தலைவர் கரு ணாநிதி, மத்திய அரசை விட்டு வெளியேறுவோம் என்று சொல்லவில்லை. கடந்த காலத்தில் எங்க ளுடைய கொள்கைகளில் ஒத்துவராத சூழ்நிலையில் நாங்கள் வெளியேற நேர்ந் தது என்றுதான் குறிப்பிட் டேன் என்றார். பெட்ரோல் விலையை குறைக்காவிட்டால் கூட்ட ணியைவிட்டு வெளியேறி விடுவோம் என்று கூற முடி யாது. திடீரென்று கூட்ட ணியை விட்டு வெளியே வந்தால் மத்தியில் வரவிருக் கின்ற ஆட்சி பிற்போக்கான ஆட்சியாக மாறிவிடலாம். மதச்சார்புடைய ஆட்சி யாக வரலாம் என்று குறிப் பிட்டார்.

Leave A Reply

%d bloggers like this: