வேலூர், மே 30-
வேலூர் மாவட்டத் திற்கு குடிநீர் வழங்க காவிரி கூட்டுக் குடிநீர் திட்டப்பணி களை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அஜய் யாதவ் உத்தரவிட்டுள்ளார். ரூ. 1,100 கோடி மதிப்பீட்டில் செயல் படுத்தப்படும் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டப்பணிகள் குறித்து ஒருங்கிணைப்பு குழு கூட்டம் ஆட்சியர் தலைமையில் நடந்தது. இதில் கூட்டு குடிநீர் திட்டப்பணிகள் முன்னேற் றம் குறித்து அதிகாரிகளி டம் ஆட்சியர் ஆலோசனை நடத்தினார். கூட்டுக் குடிநீர் புதிய குழாய்களை விரைந்து அமைக்கவும், அதற்காக நிலங்களை கையகப்படுத்த வும், குடிநீர் குழாய் கிணறு (சம்ப்) அமைக்கவும், குழாய் அமைக்கும் போது அங்கு ரயில் பாதைகள் இருந்தால், அதற்கான உரிய அனு மதியை ரயில்வே துறையி டம் பெறுவது குறித்தும் அதிகாரிகளிடம் ஆட்சியர் ஆலோசனை நடத்தினார்.
குடிநீர் திட்டப்பணி களை விரைந்து முடிக்க வேண்டும் என அதிகாரிக ளுக்கு ஆட்சியர் உத்தரவிட் டார். கூட்டத்தில் குடிநீர் வடிகால் வாரிய முதன்மை பொறியாளர் வாசன், மேற் பார்வை பொறியாளர் ஸ்ரீராம், நிர்வாக பொறியாளர் மனோகரன் (வேலூர்) அன் பழகன் (மேட்டூர்), எல் அண்ட் டி நிறுவன பொறி யாளர் ஹரிகரன், உதவி இயக்குநர்கள் ( நகரபஞ் சாயத்து ) மலையமான், முகாரி, ஆட்சியரின் நேர் முக உதவியாளர் ( நிலம் ) சின்னம்மாள், மாநகராட்சி பொறியாளர் தேவகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.