ரத்ன ஸ்ரீ பாண்டே என்ற சிறுமி, ஒன்ப தாம் வகுப்பு முடித்தவுடனேயே அவள் வீட் டில் கல்யாணம் செய்து வைக்க முடிவு செய் தார்கள். மேலும் படிக்க வேண்டும் என்ற அவ ளது கெஞ்சலைக் காது கொடுத்து கேட்க அவ ளது உறவினர்கள்-பெற்றோர் உட்பட தயாரில் லை. புகுந்த வீட்டில் படிப்புக் கான போராட் டத்தைத் தொடர்ந்தாள் அவள். நீண்ட போராட்டங்களுக்குப் பிறகு, முது நிலைப் படிப்பை முடித்து ஆசிரியையாக வேலை செய்தாள். அந்த வருமானம் போதாத தால் அரசுப் பணிக்கு முயற்சி செய்தாள். குழந்தைகளைத் தனது பெற்றோரிடம் விட்டு விட்டு நகரத்துக்குச் சென்று விடுதியில் தங்கி தீவிர முயற்சியால் முதல் நிலைத் தேர் வில் 2006- ஆம் ஆண்டு வெற்றி பெற்றாள். அதற்கு அவளது பெற்றோர் ஏறத்தாழ மூன்று லட்சம் ரூபாய் செலவு செய்திருந்தனர். குழந்தைத் திருமணத்தைத் தடுத்து நிறுத்த வக்கில்லாத மத்தியப் பிரதேச அரசு அவள் பிரதான தேர்வு எழுத தகுதியில்லை என்று தெரிவித்துவிட்டது.
காரணம் அவள் குழந்தைத் திருமணம் செய்து கொண்டது தான். மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றம் அவ ளைத் தேர்வு எழுத அனுமதித்தது. முதல் முறை அவள் வெற்றி பெறவில்லை. மற்றொரு முறை வழக்கு தொடர்ந்துதான் 2009இல் மீண்டும் தேர்வு எழுதினாள். புத்தகங்க ளோடு இருந்ததை விட நீதிமன்றங்களி லேயே அதிக நேரம் நான் இருக்க வேண்டி வந்தது என்கிறாள் அவள். உயர் நீதிமன்றம் மாநில அரசின் சட்டத்தைச் சுட்டிக்காட்டி அவளுக்கு எதிராகவே தீர்ப்பு அளித்தது. தற் போது உச்சநீதிமன்றத்தை அவள் அணுகி யுள்ளாள்.ஒரு சாதாரண சிறுமியின் அசாதாரண மான மன உறுதி நமக்கு பிரமிப்பை அளிக்கும் அதே வேளையில், ஆட்சியாளர்கள் இயற்றும் சட்டங்களின் அர்த்தமற்ற பிரிவுகள், தவறுக் குக் காரணமானவர்களைத் தண்டிப்பதற்குப் பதிலாக பாதிக்கப்பட்டவர்களையே தண்டிக் கும் மூடத்தனத்தைப் பார்த்து வேதனை யடைய வேண்டியுள்ளது. மத்திய அரசு இயற்றிய 2006ஆம் ஆண் டின் குழந்தைத் திருமண தடைச்சட்டம், நிர்ப்பந்திக்கப்பட்டு திருமணம் செய்து வைக் கப்படும் சிறுமிகளுக்கு தண்டனை அளிக் கக் கூடாது என்று தெளிவாகத் தெரிவித்தும் ரத்னஸ்ரீக்களின் நிலைமை இவ்வாறு உள்ளது. இரண்டு குழந்தைகளுக்கு மேல் அரசுத் திட்டங்கள்-சட்டங்களின் மருத்துவம் உள் ளிட்ட சலுகைகள் மறுக்கப்படுவதும் ஒரு பாவமும் அறியாத குழந்தைகளுக்கும் தாய்க் கும் தரப்படும் தண்டனையே. வளரிளம் பெண்களில் 47 சதமானம் எடை குறைவானவர்கள் ;
15-19 வயதுக்கு உட்பட்டவர்களில் 56 சதமானம் ரத்த சோகை உள்ளவர்கள் என யுனிசெஃப் அறிக்கை கூறு கிறது. ஒரு கடுமையான ஆரோக்கியப் பிரச் சனைக்கு இந்தியா உள்ளாகும் என்றும் அது எச்சரித்துள்ளது. மத்திய-மாநில அரசுகளின் சட்டங்கள், சிறுமிகளின் திருமணத்தைத் தள்ளி வைக்க ஓரளவு உதவுகின்றன. ஆனால் பிரச்சனை இன்னும் ஆழமானது.சட்டங்கள் மற்றும் திட்டங்கள், பாதிக்கப் பட்ட சிறுமிகளையும், பெண்களையும் மேலும் தண்டிக்கும் வகையிலோ, துன்புறுத்தும் வகையிலோ இருக்கக் கூடாது. மாறாக, அவர் களுக்கு மருத்துவம், சுகாதாரம், ஆரோக்கியம், உயர்கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றை அளிக்கும் வகையில், மத்திய-மாநில அரசு கள், தெளிவான, பக்குவமான கொள்கையை உருவாக்க வேண்டும்.ஆதாரம் : ‘ஹிந்து, (28.5.12 ) தொகுப்பு : ப.இந்திரா, நாகர்கோவில்

Leave a Reply

You must be logged in to post a comment.