உலகின் அனைத்து கம்ப்யூட்டர்களையும் கட்டுப்படுத்தும் வனையில் புது விதமான கம்ப்யூட்டர்களை ஹேக்கர்கள் பரப்பியுள்ளனர். இந்த புதிய வைரஸ்களால் அனைத்து கம்ப்யூட்டர்களும் வரும் ஜூலை மாதம் பாதிப்படைய வாய்ப்பு உள்ளதாக பிரபல கூகுள் நிறுவனம் எச்சரித்துள்ளது. வைரஸால் பாதிக்கப்பட்டகம்ப்யூட்டர்களை சரிசெய்து தருவதாக சர்வதேச அளவில் வெளியிடப்பட்ட விளம்பரத்தின் மூலம் ஹேக்கர்கள் இந்த வைரஸ்களை பரப்பி வருகின்றனர். இத்தகைய வைரஸ்களால் இதுவரை 3லட்சத்து 80 ஆயிரம் கம்ப்யூட்டர்கள் பாதிப்புக்குள்ளாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது சம்பந்தமாக அமெரிக்க புலனாய்வு அமைப்பு வைரஸ்களின் பாதிப்பில் இருந்து கம்ப்யூட்டர்களை பாதுகாக்கும் வகையில் முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால் சிக்கன நடவடிக்கையின் காரணமாக அந்த அமைப்பு பாதுகாப்பு இணையத்தை மூடுவதற்கு முடிவு செய்துள்ளது. இதனால் புதிய வைரஸ்களால் இணையதளங்கள் மூடப்படும் அபாயம் இருப்பதாக கூகுள் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Leave A Reply

%d bloggers like this: