சென்னை, மே 30 –
சென்னை எண்ணூரில் உள்ள நெட்டுக்குப்பத்தில் அவ்வப் போது ஏற்படும் திடீர் கடல் அரிப்பால் வீடுகள் கட லுக்குள் இழுத்துச் செல்லும் அபாயம் ஏற்படுகிறது. பெரிய அலையை கண்டாலே மீன வர்களுக்கு மரண பயம் ஏற்படும் வகையில் ஆழிப் பேரலை அச் சத்தை விதைத்துச் சென்றுள் ளது.திருவொற்றியூர் அடுத் துள்ள எண்ணூரில் அவ்வப் போது பெரிய அலைகள் எழுப்பி ஒரு சில வீடுகளை அடித்துச் சென்றுவிடுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கட்டுமர மீனவர்களுக்கு சொந்தமான 3 வீடுகள் கடலில் இழுத்துச் செல்லப்பட்டன. சுனாமி நிதி யிலிருந்து குடிசை மாற்று வாரி யத்தால் கட்டப்பட்ட இவ்வீடு கள் கடலறிப்புக்கு இரையா வதை அரசு கண்டு கொள் ளாதது கவலையளிக்கிறது. வீடிழந்த ரமேஷ் – கோகிலா, கோபி, ஜெயந்தி தம்பதியினர் தங்கள் குழந்தைகளுடன் நடுத் தெருவிற்கு வந்துள்ளனர்.இதுகுறித்து ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர் கே. குப்பன், பொதுப்பணித்துறை அமைச்சர்கள் ஆகியோரிடம் முறையிட்டும் பலனில்லை. கடலரிப்பை புடைசூழ பார்வை யிட்டு சென்றதோடு சரி இது நாள் வரை இந்த பக்கம் தலை காட்டவில்லை. கடலரிப்பை தடுக்க அரசு ஒதுக்கிய நிதி யாருடைய கை அரிப்பை தடுத்ததோ தெரியவில்லை என வீடிழந்தவர்கள் வேதனை யோடு கூறினர்.கடலின் இயற்கை சீற்றத்தை கட்டுப்படுத்த ‘தூண்டில் வளை வுகள்’ அமைக்கப்பட்டன. அலையின் வீரியத்தால் பாறை கள் கடலினூள் இழுத்துச் செல்லப்படுகிறது. ஒப்பந்தம் அடிப்படையில் பாறைகள் கொட்டுவதில் ஊழல் நடப்ப தாக கூறப்படுகிறது.வீடுகள் மட்டுமல்ல நன்கு நீந்த தெரிந்த மீனவர்களை கூட சில நேரங்களில கடல் இழுத்து சென்றுவிடுகிறது. உரிய நடவடிக்கை எடுக்க கோரி பல கட்ட போராட்டங்கள் நடத்தி யும் அரசு செவிசாய்க்கவில்லை. “மீனவ மக்களின் வாழ்வாதா ரத்தை பாதுகாப்போம்” என்று கூறி வாக்கு பெற்று ஆட்சி அமைத்த அதிமுக எங்களை கைவிட்டுவிட்டது என்று கத்தி வாக்கம் பகுதி இளைஞர்கள் விஷாந்து, மதி, குகன், கிஷோர், ராகுல், சுமன், அருண், சதீஷ் ஆகியோர் தெரிவித்தனர்.எண்ணூர் பகுதி மக்க ளுக்கு பெரும் தலைவலியாக இருப்பது கடலரிப்பு மட்டுமன்றி பாதுகாக்கப்பட்ட குடிநீர் இன் மையும் எரியாத தெருவிளக் கும் கூட தான்.
இருட்டை பயன் படுத்தி சில சமூக விரோதிகள் சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப் பட்ட பிறகும் கத்திவாக்கம் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. ஆகவே புறக்கணிக்கப்பட்ட பகுதியாக மாறிவரும் எண் ணூர் நெட்டுக்குப்பத்தை மேம் படுத்த சென்னை மாநகராட்சி யும், அரசு நிர்வாகமும் முன் முயற்சி எடுக்க வேண்டும். முதலமைச்சர், மேயர் கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் உள்ளிட்ட மக்கள் நல அமைப்புகளை ஒன்று திரட்டி உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளதாக கத்திவாக் கம் வாலிபர் சங்க பொறுப் பாளர் பார்த்தசாரதி கூறினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.