வாஷிங்டன், மே 30-ஓய்வு பெற்ற அமெரிக்க ராணுவத்தின ரின் மனநிலை அதிக அளவில் பாதிக்கப் பட்டு அவதிப்படுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.இராக், ஆப்கானிஸ்தான் நாடுகளில் அரசுகளை கவிழ்த்து விட்டு தனது கைப்பா வை அரசை அமைத்து அந்த நாட்டு வளங் களை சுரண்ட ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்களை அமெரிக்கா அனுப்பி வைத்தது. ஆனால் அமெரிக்காவின் திட்டம் நினைத்த அளவில் நிறைவேறவில்லை. மாறாக அரபு நாடுகளில் முகாமிட்டுள்ள அமெரிக்க ராணுவம் பல்வேறு நெருக்கடிகளை சந் தித்து வருகிறது. குறிப்பாக இராக், ஆப் கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் அமெ ரிக்க ராணுவத்திற்கு எதிரான தாக்குதலில் பலர் உயிரிழந்து வருகின்றனர். அமெரிக்காவின் இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளில் 16 லட்சம் அமெரிக்க ராணுவத்தினர் ஊனமாகி தாயகம் திரும்பி விட்டார்கள். இவர்களில் 45 சதவிகிதம் பேர் மனநிலை பாதிப்புக்கு உள்ளாகி மன நலம் பாதித்தவர்களாக மாறிவிட்டனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இதில் 12 சதவிகிதம் பேர் பெண் கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் போரில் 1600 ராணுவத்தினர் கால்களில் விரல்களில் இழந்து ஊனமாகி விட்டார்கள். 156 ராணுவத்தினர் கண் பார்வை இழந்து குருடாகியிருக்கின்றனர். 1 லட்சத்து 77 ஆயிரம் பேர் கேட்கும் திறனை இழந்து செவிடர்களாகி விட்ட தாக தெரியவந்துள்ளது. இவர்கள் அனை வரும் இப்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த தகவலை அமெரிக்காவில் உள்ள பாஸ்டன் மருத்துவமனை மருத்துவர் ஒருவர் தெரிவித்தார்.

Leave A Reply

%d bloggers like this: