திருச்சி, மே 30 -என்எல்சி தொழிலாளர் போராட்டத்திற்கு உரிய முறையில் தீர்வுகாண மத் திய-மாநில அரசுகள் தலை யிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா ளர் ஜி.ராமகிருஷ்ணன் வலி யுறுத்தியுள்ளார்.புதனன்று திருச்சியில் செய்தியாளர்களுக்கு பேட் டியளித்த அவர் கூறியதாவது:புதுக்கோட்டை இடைத்தேர்தலில் தேமுதிக வை ஆதரித்து விரைவில் பிரச்சாரம் மேற்கொள் வோம். டெங்கு காய்ச்சல் மற்ற மாவட்டங்களுக்கு பரவாமல் தடுக்க மாநில அரசும், சுகாதாரத்துறையும் நடவடிக்கை எடுக்கவேண் டும். பாதிக்கப்பட்டவர் களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். மேலும் கேள்வி ஒன் றுக்கு பதிலளித்த அவர், முல் லைப்பெரியார் அணையில் ஆய்வுக்காக போடப்பட்ட துளைகளை அடைக்கச் சென்ற தமிழக அதிகாரி களுக்கு அனுமதி இல்லை என்றபோது, துளையை அடைக்காவிட்டால் அணை பலவீனமாகும். எனவே துளையை அடைக்க அனு மதிக்கவேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது என்று சுட்டிக்காட்டினார்.
காவிரி நீர் பிரச்சனையில் கூட்டத்தை கூட்டுவதால் மட்டும் தனது பொறுப்பு முடிந்துவிட்டது என்று மத்திய அரசு நினைக்காமல், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை நடைமுறைப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.என்எல்சியில் 13 ஆயிரம் நிரந்தர தொழிலாளர்களும், 13 ஆயிரம் ஒப்பந்த தொழி லாளர்களும் பணியாற்றி வருகின்றனர். அங்கு கடந்த ஒரு மாதத்திற்கு மேல் ஒப் பந்த தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் நடை பெற்று வருகிறது. செவ்வா யன்று நடந்த பேச்சு வார்த்தை தோல்வி அடைந் துவிட்டது. பேச்சுவார்த்தை சங்கங்களின் சார்பாக வலி யுறுத்தப்பட்டது என்ன வென்றால், பேச்சுவார்த் தையில் தொடர்ந்து தோல்வி ஏற்படுவதால் “பெயிலியர் ரிப்போர்ட்” கொடுத்து தில்லியில் உள்ள தலைமை தொழிலாளர்துறை ஆணையர் மூலம் பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும் என்ப தாகும். இந்த கோரிக்கை நியாயமானது. இந்த என் எல்சி விவகாரத்தில் மத்திய அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கக்கூடாது. மாநில அரசும் உரிய முறை யில் நிர்ப்பந்தம் செய்ய வேண்டும் என்று ஜி.ராம கிருஷ்ணன் வலியுறுத்தி னார்.பேட்டியின்போது திருச்சி மாவட்டச் செயலா ளர் ஸ்ரீதர் உடனிருந்தார்.

Leave A Reply

%d bloggers like this: