சென்னை, மே 30 -எண்ணெய் நிறுவன முத லாளிகளுக்கு ஆதரவாகவே பெட்ரோல் விலை உயர்த் தப்பட்டுள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் டி.கே.ரங்க ராஜன் எம்.பி., கூறினார். சிபிஎம் சார்பில் செவ் வாயன்று (மே 29) மறை மலை நகரில் நடைபெற்ற அரசியல் விளக்க பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு டி.கே.ரங்கராஜன் பேசியது வருமாறு:நாடாளுமன்றத்தில் நிதி யமைச்சர் பிரணாப்முகர்ஜி தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில், ரூ.47ஆயிரம் கோடிக்கு வரிகளை உயர்த்தி, பொதுமக்கள் தலையில் சுமையை ஏற்றிய போது இரு திராவிடக் கட்சி களும் அதற்கு ஆதரவு தெரிவித்தன. இடதுசாரி கள் மட் டுமே மறைமுக வரிக்கு எதிராக வாக்களித்தார்கள்.
எனவே, பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிராக திமுக, அதிமுக நடத்துகிற போராட்டம் மக்களை ஏமாற்றும் நாடகமே ஆகும்.தமிழகத்தை ஆளுகிற அதிமுக, அதன் தலைமை, சபாநாயகர் உள்ளிட்டோர் தில்லி நாடாளுமன்ற செயல்பாடுகளை சென்று பார்க்க வேண்டும். அங்கு நடைபெறும் விவாதங் களை கவனிக்க வேண்டும்.நாடாளுமன்றத்தில் அதிமுகவினர் தங்கள் கருத்தை வலியுறுத்துவதற்கு மைய மண்டபத்திற்கு செல்ல முடிகிறது. சபாநாயகர் முன்பு குரல் கொடுக்க முடி கிறது. தமிழக சட்டமன்றத் தில் கம்யூனிஸ்ட்டுகள், எதிர்க் கட்சிகள் பேசுவதற்கு அனுமதியில்லை என்பது அநாக ரீகமானது இல்லை யா?ஆகவே, அதிமுக உறுப் பினர்கள் நாடாளுமன்றத் தில் அனுபவிக்கிற ஜனநா யக உரிமைகளில் பாதி அள வாவது, தமிழக சட்டமன் றத்தில் அதிமுக அரசு அம லாக்க முயற்சிக்க வேண்டும்.சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் 90 டாலர் களுக்குள் இருக்கும் போது விலையை, சர்வ தேச சந் தையை காரணம்காட்டி உயர்த்தி இருப்பது முத லாளிகளுக்கு ஆதரவான அப்பட்டமான கொள்கை யாகும். பெட்ரோல் விலை உயர்வு மக்களை மேலும் துன்பத்திற்கு உள்ளாக்கும்.பெட்ரோல் மீது மத்திய, மாநில அரசுகளுக்கு வரி யாக மட்டும் 34 ரூபாய் செல்கிறது. இந்த விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டுமென்றால் பெட் ரோல் மீதான வரியை மத் திய மாநில அரசுகள் குறைக்க வேண்டும்.சிபிஎம் உள்ளிட்ட இடது சாரிகள் 64 பேர் ஐமுகூ-1 அரசை ஆதரித்த போது பெட்ரோல் விலை 44 ரூபாயாக இருந்தது. இடது சாரி ஆதரவு இல்லாமல் காங்கிரஸ், திமுக, திரிணா முல் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் ஆட்சி நடைபெறுகிற போது 78 ரூபாயாக உள்ளது. கடந்த 3ஆண்டுகளில் இடதுசாரி களின் எண்ணிக்கை குறைந்த ததால், மத்தியில் மக்கள் விரோத கொள்கையை கட்டுப்படுத்தும் ஆற்றல் குறைந்து போய் உள்ளதை மக்கள் கவனிக்க வேண்டும்.
எனவேதான் மார்க் சிஸ்ட் உள்ளிட்ட இடது சாரிக் கட்சிகள் மக்கள் விரோதக் கொள்கையை எதிர்க்க முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொள் கிறது. மே-31 அன்று நடை பெறும் கடையடைப்பு போராட்டத்தை வெற்றி கரமாக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறி னார்.இக்கூட்டத்திற்கு மாவட்டக்குழு உறுப்பினர் கே.சேஷாத்திரி தலைமை தாங்கினார். மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.கண்ணன், மாவட்ட செயற்குழு உறுப் பினர் பாரதி அண்ணா, மாவட்டக்குழு உறுப்பினர் கள் ஜி.கண்ணன், தமிழரசி, செங்கல்பட்டு வட்டச் செய லாளர் பி.சண்முகம் உள் ளிட்டோர் பேசினர்.

Leave A Reply

%d bloggers like this: