இன்று உலக புகையிலை எதிர்ப்பு நாள். சிக ரெட், பீடி, புகையிலை மெல்லுதல் என பல வகைகளில் புகையிலை பழக்கம் மனிதர்களி டையே நெடுநாளாய்த் தொற்றியிருக்கிறது.இது ஒழுக்கக்கேடான பழக்கம் என்பதால் மட்டுமே எதிர்க்கப்படவில்லை.ஏனெனில் ஒழுக்கம் குறித்து ஒவ்வொரு சமூகத்துக்கும் ஒரு அளவீடு இருக்கும்.மாறாக இப்பழக்கம் உடல் நலத்துக்கு பெருங்கேடாய், சவாலாய் விஸ்வ ரூபமெடுத்துள் ளது என்பதால்தான் இந்த எதிர்ப்பு .
உலக சுகா தார நிறுவனத்தின் முடிவுப்படி 1987ஆம் ஆண்டு முதல் இந்நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. இன்று ஆண்டுதோறும் அறுபது லட்சம் பேரின் உயிரை இப்புகையிலை காவுகொள்கிறது. இதில் பெருங் கொடுமை என்னவென்றால், புகையிலைப் பழக்கமே இல்லாத ஆறு லட்சம் பேர் புகைப் பவர் பக்கத்திலிருப்பதால் பலியாகின்றனர்.நுரையீரல், கழுத்து, வயிறு புற்றுநோயாலும், மூச்சுத்திணறலாலும், மாரடைப்பாலும் இளவய தில்-35 வயதுக்கு கீழே மரணமடைபவர்களில் 40 விழுக்காட்டினர் புகையிலைப் பழக்கத்தால் மரணமடைபவர்களே.எட்டு நிமிடத்துக்கு ஒரு இந்தியர் தலைக் கழுத்து புற்றுநோயால் மரண மடைவதாகவும், அதில் 60 விழுக்காட்டினர் புகையிலை பழக்கத்தால் சாவை வரவழைத் துக் கொண்டவர்கள் என்பதும் அதிர்ச்சித் தகவலாகும். சராசரி ஆண்டுக்கு பத்து லட்சம் இந்தியர்கள் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர்.மேலும்17.3 லட்சம் பேர் இதயக்கோளாறால் பாதிக்கப்படுகின்றனர். இதில் கணிசமானோர் 40 வயதுக்கு உட்பட்டவராக இருப்பதும், பெரும் பாலும் புகையிலைப் பழக்கமே இச்சாவிற்குக் காரணம் என்பதும் கசப்பான நிஜம்.உலகம் முழுவதும் 241 மில்லியன், அதாவது 24.1 கோடி இளைஞர்கள் புகையிலைக்கு அடிமை யாக உள்ளனர். அதில் 35 விழுக்காட்டினர் இந்தி யர்கள் என்பது கவலை அளிப்பதாகும். ஆனால் லாபத்தையே குறிக்கோளாகக் கொண்ட பன் னாட்டு சிகரெட் நிறுவனங்கள் நீண்ட காலமாக எச்சரிக்கை வாசகத்தை கண்ணுக்குத் தெரி யாத பொடி எழுத்தில் அச்சிட்டுவந்தன. கடும் போராட்டத்துக்குப் பிறகே கொஞ்சம் தடி எழுத் தில் அச்சிடுகின்றன. எனினும் வேறுவகைகளில் சந்தையை விரிவாக்கிக்கொண்டுதான் இருக்கின்றன.புகைப்பழக்கத்தால் பல்வேறு வகையான விஷம் உடலில் கலக்கிறது என்று விஞ்ஞானி கள் எச்சரிக்கின்றனர். நிகோடின், கார்பன் மோனாக் சைடு, தார் உள்ளிட்ட நாலாயிரம் நச்சுப் பொருட்கள் உடலில் கலக்கின்றன என அவர்கள் எச்சரிக்கின்றனர்.மாரடைப்பு நோய்க்கு புகையிலைப் பழக்கமே மிக முக்கியமான காரணமாக உள்ளது என்றும், புகைப்பழக்கத்தில் அளவு என்று எதுவும் இல்லை என்றும், ஒவ்வொரு சிகரெட்டும் அவர்களது வாழ்நாளை குறைக்கிறது என்றும் பேராசிரியர் கவுல் கூறியுள்ளார்.
புகையிலை மற்றும் மதுபான விளம்பரங் களை தடை செய்வதற்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள போதும், திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இந்த தீய பழக்கங்களை ஊக்குவிப்பதற்கான காட்சிகள் இடம்பெறுகின்றன. பெயரளவுக்கு புகைப்பழக்கம் உடல் நலத்திற்கு தீங்கானது என்ற வாசகங்களை இடம்பெறச் செய்துவிட்டு, இளைஞர்களை தூண்டும் வகையிலான காட்சிகள் இடம்பெறுகின்றன.இந்த உயிர்க்கொல்லி பழக்கத்துக்கு எதிராக அரசு, தொண்டு நிறுவனங்கள், தனியார், பொது அமைப்புகள் என சகலரும் பிரச்சாரம் செய்ய வேண்டும். இது ஒரு நாள் நிகழ்வாக இல்லாமல் தொடர் முயற்சியாக அமைய வேண்டும்.

Leave a Reply

You must be logged in to post a comment.