நடப்பு சாம்பியன் கேரளா சத்தீஸ்கர் அணியிடம் 71-83 என்ற புள்ளிகளில் தோற்றது. இறுதி ஆட்டத்தில் சத்தீஸ்கர் மகாராஷ்டிராவுடன் மோதும்.போட்டி பரபரப்பாக இருந்தது. இரு அணிகளும் மாறி மாறி முன்னிலை பெற்றன.முதல் கால்மணியில் நன்றாக ஆடிய சத்தீஸ்கர் 15-10 என முன்னிலை பெற்றது. ஆனால் கடுமையாகப் போராடிய கேரளா, முதல் கால் மணி முடிவில் ஒரு புள்ளி முன்னிலை பெற்றது.இரண்டாவது கால்மணியில் கேரளா சிரமப்பட்டது. ஒரு கட்டத்தில் அது 24-30 எனப் பின்தங்கி இருந்தது. மீண்டும் திரண்ட கேரளா அரை மணி இறுதியில் ஒருபுள்ளி (38-39) பின்னிலை அடைந்தது சத்தீஸ்கர் 6 புள்ளிகள் முன்னிலை பெற்று நம்பிக்கையுடன் முன்னேறினர். கேரள மகளிர் சில அருமையான வாய்ப்புகளைப் பதற்றத்தில் தவற விட்டனர். சத்தீஸ்கர் 83-71 என வென்றது.பார்வையாளர்களை இருக்கையின் ஓரத்திற்கு இழுத்துச் சென்ற பரபரப்பானபோட்டியில் மகாராஷ்டிரா 57-55 என்ற புள்ளிகளில் தமிழ்நாட்டைத் தோற்கடித்தது. முதல் பாதியில் 27-32 எனப் பின்னால் இருந்த தமிழ்நாடு, மூன்றாவது கால் மணியில் 45-45 எனச் சமன் செய்தது. ஆட்டம் முடியச் சில மணித்துளிகள் இருந்தபோது, இரு அணிகளும் 55 புள்ளிகளில் சமனாக இருந்தன. கடைசி வினாடியில் மகாராஷ்டிராவின் சுருதி மேனன் வெற்றிப் புள்ளியைப் பெற்றார்.

Leave a Reply

You must be logged in to post a comment.