கலசப்பாக்கம், மே 30-
இரண்டு சக்கர வாகனம் மோதியதில் கர்ப்பிணிப் பெண் உயிரிழந்தார். வாக னம் ஓட்டிய நபரை காவல் துறை யினர் தேடி வருகிறார் கள்.கலசப்பாக்கம் அடுத்த தென்பள்ளிபட்டு கிராமத் தைச் சேர்ந்தவர் மாசிலா மணி மகன் ரகுவரன் (28). இவரின் அத்தை ஜெயா (38) என்பவரை கலசப்பாக்கம் அடுத்த காப் பலூர் கொல் லர்கொட்டாய் பகுதியைச் சேர்ந்த தமிழ்ச் செல்வன் (39) என்பவருக்கு கடந்த 1 வருடத்திற்கு முன்பு தான் திருமணம் செய்து கொடுத் தனர்.
ஜெயா தற்போது 6 மாத கர்ப்பிணியாவார்.சம்பவத்தன்று ஜெயா, போளூர் செங்கம் பிரதான சாலையைக் கடந்து சென்று தனது வீட்டிற்கு குடிநீர் எடுத் துக்கொண்டு மீண் டும் சாலையைக் கடந்து இடதுபுறமாக வந்து கொண்டிருந்தபோது இரண்டு சக்கர வாகனம் மோதி பலத்த காயமடைந் தார். அவரை போளூர் அரசு மருத்துவமனையில் சேர்த் தனர். பின் மேல் சிகிச்சைக் காக வேலூர் அரசு மருத்து வமனைக்கு கொண்டு செல் லும் போது வழியிலேயே இறந்துபோனார்.இதுகுறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, வாகனம் ஓட்டி வந்த நபரைத் தேடி வருகின் றனர்.ஜூன் 5: தியாகிகள் குறை தீர்ப்பு கூட்டம்வேலூர், மே 30-சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் அவர் களின் வாரிசுகளுக்கு குறை தீர்ப்பு கூட்டம் ஜூன் 5ம் தேதி நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித் துள்ளார். கூட்டத்தில் தியா கிகள் மற்றும் அவர்கள் குடும்ப வாரிசுகள் கலந்து கொண்டு தங்களது குறை களை எழுதி நேரில் கொடுக்க வேண்டும் என்றும் கூறினார்.

Leave A Reply

%d bloggers like this: