காத்மண்டு, மே 30-நேபாளத்தில் புதிய அர சியல் அமைப்புச் சட்டம் நிறைவேற்ற நிர்ணயிக்கப் பட்டிருந்த கால அவகாசம் முடிந்த நிலையில், மேலும் நீட்டிக்க அந்நாட்டின் உச்ச நீதி மன்றம் தடை விதித்தது. இதையடுத்து அந்நாட்டின் நாடாளுமன்றத்தை கலைத்து விட்டு தேர்தல் நடத்த ஏற் பாடுகள் நடைபெற்று வரு கின்றன. இந்நிலையில் அந் நாட்டின் இடைக்கால பிர தமராக பாபுராம்பட்டா ராய் நீடிக்க அந்நாட்டின் ஜனாதிபதி ராம்பரண்யாதவ் ஒப்புதல் அளித்துள்ளார்.நேபாளத்தில், கடந்த 2008ம் ஆண்டோடு மன்ன ராட்சி முடிவுக்கு வந்தது. அதன் பின்னர் நடைபெற்ற தேர்தலில் எந்த ஒரு கட் சிக்கும் தனிப்பெரும்பான் மை கிடைக்க வில்லை. இந் நிலையில் மாவோயிஸ்டு கள் தலைவர் பிரச்சந்தா பிரதமராக பதவியேற்றார். அதுவும் ஓர் அணி அமைத்து அந்த கட்சிகளின் ஆதர வுடன் ஆட்சியை பிடித் தார். ஆனாலும் தொடர்ந்து நிலையான ஆட்சியை கொடுக்க முடியவில்லை.
இதையடுத்து நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் ஜஹாலநாத் கானல் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப் பட்டார். ஆனாலும் தொடர்ந்து அந்நாட்டில் அரசியல் நிலையற்றத் தன் மையே நீடித்தது. இந்நிலையில் அந்நாட் டில் புதிய அரசியலமைப்புச் சட்டத்தை நிர்ணயம் செய்ய முயற்சி நடைபெற்றது. ஆனால் அனைத்துக் கட்சி களுக்கும் இடையே உடன் பாடு ஏற்படவில்லை. இதை யடுத்து அனைத்துக் கட்சிக ளும் பங்குகொண்ட தேசிய அரசு அமைக்கப்பட்டது. அனைத்துக் கட்சிகளின் ஒத்துழைப்புடன், அரசியல மைப்புச் சட்டத்தை, இம் மாதம் 27ம் தேதிக்குள் நிறை வேற்ற திட்டமிடப்பட்டது. ஆனாலும் ஒத்தகருத்து ஏற் படவில்லை. இதனால், புதிய அரசியலமைப்புச் சட் டம் நிறைவேற்றப்படுவது தள்ளிப்போனது.நேபாள அரசியலமைப்பு மாதிரியை உருவாக்குவதற்காக அமைக்கப்பட்ட, அரசியல் நிர்ணய சபையின் கால அவகாசத்தை மேலும் நீட்டிக்க, அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தடை விதித் துள்ளது.அரசியல் நிர்ணய சபை மே 27ம் தேதியுடன் காலா வதியானது. இதையடுத்து அந்நாட்டின் அரசு கலைக் கப்பட்டது. மீண்டும் தேர் தல் நடத்துவதற்கான ஏற்பா டுகள் நடைபெற்று வருகி ன்றன. இந்நிலையில் நேபா ளத்தில் புதிய அரசு அமை யும் வரை பாபுராம்பட் டாராயை, இடைக்கால பிரதமராக நீடிக்க, ஜனாதி பதி ராம்பரண் யாதவ் ஒப் புதல் அளித்துள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.