காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் அருகே உள்ள ஆலத்தூர் சிட்கோ தொழிற்பேட்டையில் செயல்பட்டு வரும் ஆர்க்கிட் கெமிக்கல்ஸ் அண்டு பார்மா சூட்டிக்கல்ஸ் லிமிடெட் என்ற மருந்து தயாரிக்கும் நிறுவனம் ஒவ்வொரு ஆண் டும் சுமார் 1000 கோடி ரூபாய்க்கு வியாபாரம் செய்து வருகிறது. இந் நிறுவனத் தில் உற்பத்தி செய்யப்படும் மருந்துகள் அனைத்தும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.ஊழியர்கள் மற்றும் இரசாயன நிபுணர்கள் என சுமார் 870 பேர் பணிபுரிகி றார்கள். இரசாயன தொழிற் சாலையான இக்கம்பெனி யில் பணிபுரியும் பல தொழி லாளர்கள் தொழில் தொடர் பான நோய்களால் பாதித்து வருகிறார்கள். பாதுகாப்பு விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படாததால் அவ்வப்போது விபத்துகள் ஏற்படுகின்றன. 3.11.2005 அன்று இரசாயனப் பொருட் கள் கலந்தபோது மிகப் பெரிய விபத்து ஏற்பட்டு ராஜா, செந்தில்குமார், இசக் கிராஜ் ஆகிய 3 தொழி லாளர்கள் சம்பவ இடத்தி லேயே இறந்தனர்.
விபத்துக் கால விடுப்பு மற்றும் நட்ட ஈட்டுத் தொகை முறையாக வழங்கப்படவில்லை. இந்த சூழ்நிலையில் 1998ல் சிஐடியு இந்த பிரச்சனையில் தலையிட்டது. ஆனால் நிர் வாகம் பேச்சுவார்த்தை நடத்தி உடன்பாடு காணா மல் பழிவாங்கும் நடவடிக் கையில் ஈடுபட்டது. சங்க நிர் வாகி உள்ளிட்ட 64 பேரை சஸ்பெண்ட் செய்தது. 27 பேரை டிஸ்மிஸ் செய்தது. தொழிற்சங்கத்தில் சேர மாட்டோம் என்ற நிபந்த னையை ஏற்றுக்கொண் டால் பழிவாங்கலை வாபஸ் பெறுவதாக கூறினர்.ஆனால் ஊழியர்கள் அதற்கெல்லாம் அஞ்சாமல் 2007ல் “ஆர்க்கிட் கெமிக்கல் அண்டு பார்மாசூட்டிகல்ஸ் எம்ப்ளாயீஸ் யூனியன்” என்ற சங்கத்தை பதிவு செய்து பொதுக்கோரிக்கையை வலியுறுத்தினர். அப்போதும் பேச்சுவார்த்தை நடத்தாமல் நிர்வாகம் பழிவாங்கும் நட வடிக்கையில் ஈடுபட்டது. காவல்துறையில் பொய் புகார் அளித்து மிரட்டியது. சங்க நிர்வாகி உட்பட 276 பேரை சஸ்பெண்ட் செய் தது. இந்த நடவடிக்கை சட்ட விரோதமானது என்று நீதி மன்றம் உத்தரவிட்டபின் னர் 276 தொழிலாளர்களுக்கு சுமார் ரூ.29 கோடி ரூபாய் செட்டில்மென்ட் தொகையை அளித்து வீட்டிற்கு அனுப்பி விட்டது.மீதியுள்ள தொழிலாளர் களும், புதிதாக வேலைக்கு எடுக்கப்பட்ட தொழிலா ளர்களும் சேர்ந்து 2012 ஜனவரியில் நடந்த சங்க தேர்தலில் ஜி. பொன்முடி தலைமையிலான சிஐடியு சங்கத்தை தேர்ந்தெடுத்த னர். இதன்பின்னரும் நிர் வாகம் பாடம் கற்றுக்கொள் ளாமல் சங்க நிர்வாகக் குழுவுக்கு எதிராக பொய் குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருகிறது. இதனால் தொழி லாளர்களின் போராட்டம் தொடர்கிறது.1991 ஆம் ஆண்டு உலக மயமாக்கல் கொள்கை அம லுக்கு வந்து பின்னர் வெளி நாட்டு மற்றும் உள்நாட்டுக் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் சங்கம் சேர்ந்தாலோ அல்லது தொழிற்சங்கம் துவங்கி னாலோ கொத்து கொத்தாக நீக்கப்படுகிறார்கள்.இந்த அவலத்தை தொழிலாளர் துறையால் தடுத்து நிறுத்த முடியவில்லை.எனவே இந்த போராட்டம் உலக மயக் கொள்கைகளுக்கு எதிரான போராட்டமாகும்.

Leave a Reply

You must be logged in to post a comment.