காபூல், மே.30-ஆப்கானிஸ்தானில் உள்ள பெண்கள் கல்வி கற்பதற்கு தலிபான்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். தலிபான்கள் மதபழமைவாத நோக்கில் தொடர்ந்து மதவெறியுடன் செயல்பட்டு வருகின்றனர். குறிப்பாக பெண்கள் படிக்கக்கூடாது என்பதை விதியாக வகுத்துக் கொண்டு அதனை செயல்படுத்தி வருகின்றனர். அப்படி மீறி பள்ளிக்குச் சென்று பெண்கள் படித்தால் அந்த பள்ளிகள் மீது குண்டுகளை வீசி தகர்ப்பதும், விஷவாயுக் களை பரப்பி தாக்குதல் நடத்துவதும் தொடர்ந்து நீடிக்கிறது. கடந்த 24-ம் தேதி ஆப்கானிஸ்தானின் தாக்கர் மாகா ணத்தில் உள்ள ஒரு பெண்கள் பள்ளிக்குள் புகுந்த தலிபான் தீவிரவாதிகள், அங்குள்ள வகுப்பறைகளில் விஷவாயுவை பரவவிட்டனர். இதனால் 3 பள்ளி ஆசிரியைகள் உள்பட 122 மாணவிகள் மயக்கமடைந்தனர். இந்நிலையில் தற்போது அதே மாகாணத்தில் மீண்டும் ஒரு பெண்கள் பயிலும் பள்ளி மீது விஷவாயுவை பரப்பியுள்ளனர். இதில் பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு கடுமையான மூச்சு திணறல் ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்து அனைவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிக்சை பெற்று வருகின்றனர். தொடர்ந்து இது போன்று பெண்கள் பயிலும் பள்ளிகள் மீது தலிபான் தீவிரவாதிகள் தாக்குதல் தொடுத்து வருவதால் இதுவரை 600க்கும் மேற்பட்ட பெண்கள் பள்ளிகள் மூடப்பட் டுள்ளன.

Leave A Reply

%d bloggers like this: