தேன்கனிக்கோட்டை, மே 30-
தேன்கனிக்கோட்டையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் வட்டக்குழு பேரவைக்கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்திற்கு வட் டச்செயலர் தலைமை தாங் கினார். கூட்டத்தில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங் கள்:அரசு மருத்துவமனை யில் ஜெனரேட்டரை உட னடியாக இயக்க வேண்டும். ஊசிபோடும் பகுதியை தனித்தனியாக பிரித்து, ஆண்கள் மற்றும் பெண்க ளுக்கென செவிலியர்களை நியமிக்க வேண்டும், சீனி வாசா திரையரங்கின் எதிரில் உள்ள மதுபானக் கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும், ஆக.15 அன்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பாக ரத்த தான முகாம் நடத்துவது என இந்தக் கூட்டத்தில் தீர் மானங்கள் நிறைவேற்றப் பட்டன.இக்கூட்டத்திற்கு மாநிலப் பொருளாளர், எஸ். பாலா, மாவட்டச் செயலர் அஸ்வத் நாராய ணன், வட்டத் தலைவர் பி. சிவராஜ், வட்டப் பொருளா ளர் லோகேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: