இஸ்லாமாபாத், மே 30- கடந்த 72 மணி நேரத்தில் அமெரிக்காவின் ஆளில்லா விமானங்கள் மூலம் ஏவு கணை வீசி தாக்குதல் நடத் தியதில் 31 பேர் கொல்லப் பட்டனர்.பாகிஸ்தான், ஆப்கா னிஸ்தான், ஏமன், சோமா லியா ஆகிய நாடுகளில் உள்ள தீவிரவாதிகளை அழிக்கிறோம் என்ற பெய ரில் அமெரிக்கா தொடர்ந்து ஆளில்லா விமானங்களை பயன்படுத்தி குண்டுகளை வீசி வருகிறது. இதில் பெரு ம்பகுதி அப்பாவி மக்கள் பலியாகி வருகின்றனர். இந்த நிலையில் ஏமன், பாகிஸ்தான், ஆப்கானிஸ் தான் ஆகிய நாடுகளில் கடந்த 72 மணி நேரத்தில் ஆளில்லா விமானங்கள் மூலம் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் 31 பேர் கொல்லப் பட்டுள்ளனர். ஏமன் நாட் டில் உள்ள ரட்டா நகரின் அருகே வேகமான சென்று கொண்டிருந்த 3 கார்கள் மீது ஆளில்லா விமானம் மூலம் ஏவுகணையை வீசி தாக்குதல் நடத்தியது. இதில் 7 பேர் பலியாகினர்.இதேபோல் பாகிஸ் தான் வடமேற்கு பகுதியில் பழங்குடியினர் வசிக்கும் 2 இடங்களில் அமெரிக்கா வின் ஆளில்லா விமானங் கள் குண்டு வீசி தாக்கின.
ஹசோக்கல் என்ற இடத் தில் அமெரிக்காவின் ஆளில்லா விமானங்கள் குண்டு வீசி தாக்கியதில் 12 பேர் கொல்லப்பட்டனர். தத்தாகல் என்ற இடத்தில் ஆளில்லா விமானங்கள் குண்டு வீசியதில் 4 பேர் இறந்தனர்.ஆப்கானிஸ்தானில் உள்ள சுரிகேயில் என்ற இடத்தில் அமெரிக்க ஹெலிகாப்டர்கள் குண்டு வீசி தாக்கியதில் ஒரே குடும் பத்தைச் சேர்ந்த முகமது சபி, இவரது மனைவி, இவர் களுடைய 6 குழந்தைகள் ஆகிய 8 பேர் பலியாகி விட்டனர். இது பற்றி அரசு அதிகாரி ஒருவர் கூறும் போது, முகமது சபி தலி பான் தீவிரவாதி அல்ல. அவர் ஒரு அப்பாவி கிராம வாசி என்று வருத்தத்துடன் தெரிவித்தார். ஒரே குடும்பத் தை சேர்ந்த 8 பேர் கொல் லப்பட்டது அந்த கிராமத் தை சோகத்தில் ஆழ்த்தியி ருக்கிறது.இது குறித்து வாஷிங்ட னில் ராணுவ அதிகாரி ஒரு வர் கூறும்போது, பயங்கர வாதிகளை குறிவைத்துத் தான் விமானத் தாக்குதல் நடத்தப்படுகின்றன என் றார். ஆனால் தாக்குதல் நடத்தப்பட்ட இடங்களில் உள்ள அரசு அதிகாரிகள் கூறும்போது , அமெரிக்க விமான தாக்குதலில் அப் பாவி மக்கள் தான் கொல் லப்படுகிறார்கள் என்று அமெரிக்காவின் கருத்தை மறுத்தார்.இந்த நிலையில் அமெ ரிக்க அதிபர் பாரக் ஒபாமா பாகிஸ்தானில் பழங்குடி மக்கள் வசிக்கும் பகுதிகளி லும், ஆப்கானிஸ்தானிலும் ஆளில்லா விமானங்கள் மூலம் குண்டு வீசி தாக்குதல் நடத்தப்படுவதை ஒத்துக் கொண்டுள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.