உலகின் மிக அபூர்வமான வைரக்கல் 17.4 மில்லியன் டாலருக்கு ஏலத்தில் வாங்கப்பட்டுள்ளது. ஹாங்காங்கில் இடம்பெற்ற ஏலத்தில் 6 நிமிடங்களில் எதிர்பாராத அளவுக்கு இந்த வைரக்கல் விலை போகியுள்ளது. இதன் எடை 12 காரட்டுகள் (20.5 கிராம் எடை) கொண்டது. இவ்வகையான வைரம் மிக மிக அரிதானது. வட்டவடிவில் இருக்கும் இந்த வைரக்கல்லை பெயர் வெளியிட விரும்பாத நபர் தொலைபேசியின் மூலம் ஏலத்தில் பங்கேற்று வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வைரக்கல் 8 மில்லியன் அமெரிக்க டாலருக்கு விலைபோகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால்இதன் ஏலமதிப்பு 17.4 மில்லியன் டாலருக்கு சென்றது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.1976ல் அமெரிக்கா செவ்வாய் கிரகத்திற்கு செயற்கைக்கோளை அனுப்பியதன் நினைவாக இதற்கு மார்ஷியன் வைரம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

Leave A Reply