திருப்பூர், மே 29-திருப்பூர் ஏ.டி.டி.சி கல்வி மைய இயக்குநர் சி.நாகராஜன் கூறியுள்ளதாவது: மத்திய ஜவுளித்துறை அமைச்சகம் சார்பில் செயல்படும் அப்பேரல் டிசைனிங் அண்டு டிரெயினிங் சென்டரான ஏ.டி.டி.சி கல்வி மையத்தில், இந்த ஆண்டு மெர்ச்சண்டைசிங் கல்வி வகுப்புகள் வருகிற ஜுன் மாதம் தொடங்க உள்ளன. திருப்பூர் பின்னலாடை தொழில் துறையினருக்கு தேவையான தொழில் நுட்ப வல்லுநர்களை எங்கள் கல்வி மையம் உருவாக்கி வருகிறது. நிட்டிங், காஸ்டிங், பேட்டன் மேக்கிங் உட்பட பல்வேறு பின்னலாடை சார்ந்த கல்வி இங்கு வழங்கப்பட்டு மத்திய அரசின் சான்றிதழ் பெற்றுத்தரப்படுகிறது. இதன்மூலம் உடனடி வேலைவாய்ப்பு பெறமுடியும். எனவே மாணவர்கள்இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மேலும் விபரங்களுக்கு திருப்பூர் இந்திரா நகர் பகுதியில் உள்ள ஏ.டி. டி.சி மையத்தை அணுகலாம் என்று கூறியுள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.