வேலூர், மே. 13-
வாலிபர் சங்க தலைவர்கள் மீது தாக்குதல் நடத்திய ஆற் காடு தாலுகா காவல் நிலைய உதவி ஆய்வாளர் மற்றும் பயிற்சி ஆய்வாளர் மீது நட வடிக்கை எடுக்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வலியுறுத்தி உள்ளது.இது குறித்து மாவட்டச் செயலாளர் ஏ. நாராயணன் விடுத்துள்ள அறிக்கை வரு மாறு:வந்தவாசி ஆட்டோ தொழிலாளி பிரச்சனையில் நியாயம் கேட்டும், இந்திய ஜனநாயக வாலிபர் சங் கத்தை தரக் குறைவாக பேசி யது குறித்து விளக்கம் கேட்க பி. கன்னியப்பன், தாலுகா செயலாளர் மதி, தாலுகா குழு உறுப்பினர் எஸ். செல் வம் இந்திய ஜனநாயக வாலி பர் சங்க தாலுகா செயலா ளர் ஆகியோர் ஆற்காடு தாலுகா காவல் நிலையத் திற்கு சென்றுள்ளனர்.
இந் நிலையில் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டு இருக் கும்போது ஆற்காடு தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் முன்னிலையிலேயே ஆற் காடு காவல் நிலைய உதவி ஆய்வாளர் (முதல் நிலை) வாலிபர் சங்க தாலுகா செய லாளர் எஸ். செல்வம் மீது தாக்குதல் நடத்தியுள்ளார். மேலும் உதவி ஆய்வாளர் மற்றும் பயிற்சி ஆய்வாளர் ஆகியோர் இந்திய ஜன நாயக வாலிபர் சங்கம், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அமைப்புகளை தரக் குறைவான அநாகரீகமான வார்த்தைகளில் பேசியுள் ளனர்.மேற்காண்ட ஆற்காடு தாலுகா காவல் நிலைய செயல்பாட்டையும், மனித உரிமை மீறலையும் ஆட் டோ தொழிலாளியிடம் ரூ. 3000 லஞ்சம் கேட்டதை யும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட் சியின் வேலூர் மாவட்டக் குழு வன்மையாக கண்டிக்கி றது.
மேற்கண்ட விஷயத்தில் மாவட்ட காவல் கண்காணிப் பாளர் தலையிட்டு லஞ்சம் கேட்ட உதவி ஆய்வாளர் பி. சேகர் மற்றும் தாக்குதல் நடத்திய உதவி ஆய்வாளர் (முதல்நிலை) பயிற்சி ஆய் வாளர் ஆகியோரை பணி யிடை மாற்றம் செய்து துறை ரீதியான நடவடிக்கை உட் படுத்திட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.காவல் நிலைய அராஜ கத்தை கண்டித்து திங்க ளன்று (மே.14) மாலை 4 மணிக்கு ஆற்காடு பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இவ்வாறு அந்த அறிக் கையில் கூறப்பட்டிருந்தது.

Leave a Reply

You must be logged in to post a comment.