சேலம், மே. 12-
சேலம் மாவட்டத்தில் கடந்த 2009- 2010ம் ஆண்டு சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராக பணியாற்றியவர் ஜலால் மொய்தீன். இவர் பணி காலத்தில் 16 ஆயிரம் பேருக்கு முதியோர் ஓய்வூதியம் வழங்க உத்தரவிட்டார்.
இதன்படி பயனாளிகள்அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இவர் தாசில்தார் பணி காலத்தில் முறைகேடாக ஓய்வூதியம் வழங்கியதாக மாவட்ட ஆட்சியருக்கு தகவல் கிடைத்தது. இதனை விசாரிக்க தனி குழு ஒன்று அமைக்கப்பட்டது.
அக் குழுவினரின் விசாரணையில் ஜலால் மொய்தீன் பணி காலத்தில் 8 ஆயிரத்து 500 பேருக்கு முறைகேடாக ஓய்வூதியம் வழங்கியது தெரியவந்தது. இதையடுத்து தற்போது வீட்டு வசதி வாரிய நில அளவு தாசில்தாராக பணியாற்றி வரும் ஜலால் மொய்தீனை சேலம் மாவட்ட ஆட்சியர் பணிநீக்கம் செய்தார்.

Leave A Reply