திருப்பூர், மே 12-
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளத்தில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் புதிய கிளை அமைக்கப்பட்டுள்ளது.இந்த கிளை அமைப்புக் கூட்டம் மடத்துக்குளத்தில் தேவயானி தலைமையில் நடைபெற்றது.
இதில் மாவட்ட நிர்வாகிகள் தோழன் ராஜா, இளையபாரதி மற்றும் பாடகர் துரையரசன் ஆகியோர் பங்கேற்றனர்.புதிய கிளைத் தலைவராக கடத்தூர் ஜெயராமன், கிளைச் செயலாளராக பன்னீர்செல்வம், பொருளாளராக தேவயானி, துணைத் தலைவராக அமீர் அம்ஜா, துணைச் செயலாளராக வள்ளியம்மாள் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
மடத்துக்குளம் தமுஎகச புதிய கிளை சார்பில் குறும்பட விழா நடத்துவது, நூல் வெளியீட்டு விழா நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது.

Leave A Reply

%d bloggers like this: