கோவை, மே 12-
சென்னையில் இயங்கி வரும் புகழ்பெற்ற மென்பொருள் நிறுவனமான டாட்டா கன்சல்டன்சி சர்வீஸின் பிபிஓ பிரிவு (டிசிஎஸ்) சார்பில், எஸ்.சி., எஸ்.டி., சிறுபான்மையினர் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ளவர்களுக்கான இலவச வகுப்புகள் நடைபெறவுள்ளது.
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் திங்களன்று (மே 14) துவங்கும் இவ்வகுப்புகள் மூன்று வாரம் நடைபெறும்.
இதில், முதுகலை, பொறியியல் மற்றும் பயன்பாட்டு அறிவியல் தவிர இதர இளநிலைப் பட்டப்படிப்பை முடித்தவர்கள் கலந்து கொள்ளலாம். இப்பயிற்சி வகுப்பில், ஆங்கில மொழி, காரணமறிதல் உள்ளிட்டவை கற்றுத்தரப்படும். பயிற்சி முடிந்த பின்னர், டிசிஎஸ் மனிதவள அதிகாரிகள் மூலம் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும்.
இதுகுறித்த தகவல்களை பாரதியார் பல்கலைக்கழகத்தைத் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

Leave A Reply