ஈரோடு, மே 12-
தமிழக அரசு மஞ்சளுக்கான குறைந்தபட்ச ஆதாய விலையை நிர்ணயிக்கக் கோரி ஜூலை 21ம் தேதி ஈரோட்டில் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்துவதாக ஈரோடு அனைத்து விவசாயிகள் சங்கமும் சேர்ந்து முடிவெடுத்துள்ளது.
தமிழகத்தில் மஞ்சள் விவசாயத்தில் ஈரோடு மாவட்டம் முக்கியப் பங்கு வகிக்கிறது. ஈரோட்டில் சுமார் 9,000 ஹெக்டேர் பரப்பளவில் மஞ்சள் பயிரிடப்படுகிறது. இங்கு விளைவிக்கப்படும் மஞ்சள், இந்தியா மட்டுமின்றி, அமெரிக்கா, வங்காளதேசம், இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளுக்கும் பெருமளவு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இதனைக் கருத்தில் கொண்டுமஞ்சளுக்கு குறைந்தபட்ச ஆதாய விலையை அரசு நிர்ணயிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஜூலை 21ம் தேதி கொடுமுடியிலிருந்து ஈரோடு வரை பேரணியும், பொதுக்கூட்டம் நடத்துவது எனவும் வெள்ளியன்று நடைபெற்ற கூட்டத்தில் அனைத்து விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் முடிவு செய்துள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: