கோவை, மே 12-
கோவை மாநகராட்சியில் புதிதாக 50 பூங்காக்கள் அமைக்கப்படவுள்ளது. இவையனைத்தும் மாநகராட்சியோடு புதிதாக இணைக்கப்பட்டுள்ள ஐந்து மண்டலங்களில் ஏற்படுத்தப்படவுள்ளன.
இதுகுறித்து மாநகராட்சி கல்வி, பூங்கா மற்றும் விளையாட்டு மைதானக்குழு தலைவர் ஆர்.சந்தானமணி கூறுகையில், கடந்த உள்ளாட்சித் தேர்தலின் போது, குறிச்சி, குனியமுத்தூர், சின்னவேடம்பட்டி மற்றும் கவுண்டம்பாளையம் ஆகிய பகுதிகள் மாநகராட்சியோடு இணைக்கப்பட்டன. இப்பகுதி மக்கள் மாலை நேரங்கள் மற்றும் விடுமுறை நாட்களில் நடைபயிற்சி மற்றும் குழந்தைகளோடு விளையாடி மகிழும் வகையில் இப்பகுதிகளில் 50 பூங்காக்கள் அமைக்கப்படவுள்ளன.
இதற்கான கூட்டம் நடைபெற்றது. அதில், கலந்து கொண்ட குழு உறுப்பினர்கள் , பூங்கா அமைப்பதற்கான இடம் குறித்த விருப்பப் பட்டியலை அளித்துள்ளனர். இப்பட்டியலை மேயர் மற்றும் ஆணையாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றார்.இதுகுறித்து கோவை மாநகராட்சி மேயர் செ.ம.வேலுச்சாமி தெரிவிக்கையில், புதிதாக மாநகராட்சியோடு இணைக்கப்பட்ட 11 வார்டுகளில் இப்பூங்காக்கள் அமைக்கப்படவுள்ளன. இதற்காக ரூ. 5.97 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மொத்தம் 64 இடங்களில் இப்பூங்காக்கள் அமையவுள்ளன என்றார்.இதுகுறித்து கோவை மாநகராட்சி ஆணையாளர் டி.கே.பொன்னுசாமி தெரிவிக்கையில், புதிதாக அமைக்கப்படவுள்ள ஒவ்வொரு பூங்காவும் ரூ 6 லட்சம் முதல் ரூ.10 வரை அமைக்கப்படவுள்ளது.
அதன்படி, வடக்கு மண்டலத்தில் 12 பூங்காவும், கிழக்கு மண்டலத்தில் 17 பூங்காக்களும், மேற்கு மண்டலத்தில் 12 பூங்காக்களும், தெற்கு மண்டலத்தில் 17 பூங்காக்களும், மத்திய மண்டலத்தில் 6 பூங்காக்களும் அமைக்கப்படும். இப்பூங்காக்கள் அனைத்தும் காலியிடங்கள் மற்றும் அரசு நிலங்களில் கட்டப்படும் என்றார்.

Leave A Reply

%d bloggers like this: