உடுமலை, மே.12-
உடுமலை அருகேயுள்ள குடிமங்கலம் பகுதியை சேர்ந்த விவசாயி பழனிசாமி. இவருடைய மகன் மோகன் பிரசாத் ( வயது 22). இவர் கோவையிலுள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார்.
இந்நிலையில் விடுமுறை தினத்தில் ஊருக்கு வந்த இவர் தந்தைக்கு உதவியாக தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது, மழை பெய்ந்துள்ளது.
அப்போது, அங்குள்ள தென்னை மரத்தடியில் ஒதுங்கியிருந்த நிலையில் மரத்தில் இடி தாக்கி உள்ளது. இதில் மரத்தடியில் நின்றிருந்த மோகன் பிரசாத் மீது இடிதாக்கப்பட்டு மயங்கி விழுந்தார். இதையடுத்து அப்பகுதியினர் உடுமலை அரசு மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்றனர். ஆனால், மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

Leave A Reply

%d bloggers like this: