கோவை, மே. 11-கோவையில் இருந்து கேரளாவுக்கு ரேசன் அரிசி கடத்தப்படுவதாக சிவில் சப்ளை பறக்கும்படை தாசில்தாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அதிகாரிகள் மதுக்கரை மார்க்கெட் புதுப்பாலம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு ஜீப்பை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 1.5 டன் ரேசன் அரிசி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள் அந்த அரிசியை பறிமுதல் செய்தனர்.

Leave A Reply