திருச்சிராப்பள்ளி, மே 11- திருச்சி மாவட்டம், வை யம்பட்டி ஊராட்சி ஒன்றி யம் அயன்ரெட்டிபட்டி ஊராட்சியில் வளர்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட் சியர் ஜெயஸ்ரீ முரளிதரன் வியாழனன்று ஆய்வு செய்தார். தமிழக முதல்வரின் சோலார் விளக்குடன் கூடிய பசுமை வீடுகள் கட்டும் திட் டத்தின்கீழ் அயன்ரெட்டிப் பட்டி ஊராட்சியில் நடை பெற்று வரும் கட்டுமானப் பணிகளை ஆட்சியர் ஆய்வு செய்தார். மேலும், மகளிர் சுகா தார வளாகம் பராமரிப்புப் பணிகள் முடிவுற்றதை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அயன்ரெட்டிப் பட்டி ஊராட்சியில் ஒன் றிய பொது நிதியில் ஆழ் குழாய் கிணறு அமைக்கும் பணியையும், 13-வது நிதிக் குழு மானியத்திட்டத்தில் இளங்காக்குறிச்சி முதல் தொப்பநாயக்கன்பட்டி வரை ரூ. 25 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் தார்ச் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருவதை பார்வையிட்டார். இப்பணிகள் அனைத் தும் தரமானதாக இருக்க வேண்டும் என்றும், விரை வில் மக்கள் பயன்பாட் டிற்கு கொண்டு வரவேண் டும் என்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். ஆய்வின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கோ.ராதா, வையம்பட்டி ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் சே.கல்பனா சேது, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பழனிச்சாமி, வட்டார வளர்ச்சி அலு வலர்கள் எஸ்.சித்ரா, இரா. ஸ்டேன்லிமதிச்செல்வன், உதவிப் பொறியாளர்கள் ரவிச்சந்திரன், அரங்கநாதன் ஆகியோர் உடனிருந்தனர்.

Leave A Reply

%d bloggers like this: