வால்பாறை, மே 11-வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இரவு நேரங்களில் வரும் சிறுத்தைகள் குடியிருப்புப் பகுதிகளுக்கு சென்று நாய், ஆடு, மாடுகளை வேட்டையாடுகின்றன. இந்நிலையில் புதனன்று இரவு வால்பாறை அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்திற்குள் சிறுத்தை ஒன்று வந்துள்ளது. வியாழனன்று சாலையில் சென்ற ஒருவர் சிறுத்தை சென்றதைப் பார்த்து வனத் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார். வனத்துறையினர் வியாழக்கிழமை காலை அங்கு சென்று பார்த்தபோது சிறுத்தையின் கால் தடம் பதிந்திருப்பது தெரியவந்தது.

Leave A Reply