சென்னை, மே 11 –
மக்களுக்கு பாதுகாப்பு அளிப்பதாகக் கூறிக்கொண்டு ரோந்து சென்ற காவல்துறையி னர் இந்திய ஜனநாய வாலிபர் சங்க தலைவரைத் தேவை யின்றி தாக்கிய சம்பவம் நடந் துள்ளது. இது தொடர்பாகக் கூறப்படுவது வருமாறு:கடந்த புதனன்று (மே 9) மாலை, வாலிபர் சங்கத்தின் விருகம்பாக்கம் பகுதிச் செய லாளர் டி. லெனின், நண்பர்களு டன் பேருந்து நிலையம் அருகே உள்ள டீ கடையில் டீ குடித்துக்கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த ‘ஆர்10’ காவல் நிலைய துணை ஆய்வாளர் முனுசாமி, கார ணமே இல்லாமல் லெனினை வன்மையாகத் தாக்கினார். தகாத வார்த்தைகளால் திட்டி யுள்ளார். சட்டைக் காலரை பிடித்து இழுத்தபடி ஆய்வாளர் சுப்பிரமணியிடம் கொண்டு சென்றார். அவரும் லெனினி டம் எதுவும் கேட்காமல் அடித் துள்ளார்.காவல்நிலைய ஆய்வா ளர், துணை ஆய்வாளர் இருவ ரது இந்த அத்துமீறலைக் கண்டித்து அன்று மாலையே ‘ஆர் 10’ காவல்நிலையம் முன் பாக மார்க்சிஸ்ட் கட்சியின் பகுதிச் செயலாளர் ஜி. செல்வா தலைமையில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. அங்கு வந்த உதவி ஆணை யர் ராஜேந்திரனிடம் புகார் அளிக்கப்பட்டது.தொடர்ந்து இவ்வாறு பொதுமக்களையும் பொது இயக்கங்களைச் சேர்ந்தோ ரையும் அப்பாவி இளைஞர்களை யும் துன்புறுத்திவரும் துணை ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது. இரவு நேரத்தில் டீ கடைக்கு வருகிற தொழிலாளர்கள், இளைஞர்கள் மீது இவ்வாறு தாக்குதல் நடத்துவதற்கு முற்றுப் புள்ளி வைக்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டது.கோரிக்கைகளை பரிசீலிப் பதாக உதவி ஆணையர் வாக் குறுதி அளித்ததையடுத்து முற்றுகை விலக்கிக்கொள்ளப் பட்டது. போராட்டத்தில் வாலி பர் சங்கத் தலைவர்கள் எம். தாமு மற்றும் பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: