மொகாலி, மே 11-
மத்திய நிதியுதவியை அலைக்கழிக்க வேண்டு மென்று ஐமுகூ அரசு முயற் சித்து வருகிறது என்று பஞ் சாப் துணை முதல்வர் சுக் பீர் சிங் பாதல் தெரிவித்தார்.கடந்த 5 ஆண்டுகளாக பஞ்சாப் காங்கிரஸ் கட்சி பஞ் சாப் அரசிற்கு மத்திய நிதியு தவி கிடைக்கவிடாமல் அலைக்கழித்தது என்று நிகழ்ச்சியொன்றில் உரை யாற்றிய பாதல் தெரி வித்தார். பஞ்சாபி நாட்டுப் புறக்கலை ஞரும் திரைப்படக் கலை ஞருமான ஹர்பஜன் மானை மாவட்ட திட்டக்குழுவின் புதிய தலைவராக நியமிக்கும் விழாவில் பாதல் உரையாற் றினார். சிரோமணி அகாலி தள்-பாஜக அரசிற்கெதிரான தீவிர பிரச்சாரத்தையும் மீறி மக்கள் அதே அரசைத் தேர்ந் தெடுத்துள்ளனர். காங்கிரஸ் கட்சியின் மாநில விரோதப் போக்கின் காரணமாக அவர் களை மக்கள் தேர்ந்தெடுக்க வில்லை என்று அவர் குறிப் பிட்டார்.
ஜெகன்மோகன் ரெட்டியின் பத்திரிகை-
தொலைக்காட்சிக்கு விளம்பரம் நிறுத்தம்
ஹைதராபாத், மே 11-
வருமானத்திற்கு அதிக மான சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பாக, கடப்பா நாடாளு மன்ற உறுப்பினர் ஒய்.எஸ். ஜெகன்மோகன் ரெட்டிக்குச் சொந்தமான சாக்ஷி பத்திரி கை மற்றும் இந்திரா தொலைக் காட்சி நிறுவனத்தின் வங்கிக் கணக்குகளை சிபிஐ முடக் கியதைத் தொடர்ந்து ஆந்திரப் பிரதேச அரசு அந்நிறுவனங் களுக்கு விளம்பரங்கள் அளிப் பதை நிறுத்திவிட்டது.ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தலைவரான ஜெகனுக்குச் சொந்தமான சாக்ஷி குழுமத் தின் ஜெகதி பப்ளிகேஷன்ஸ் நிறுவனத்தின் மீது சிபிஐ குற் றப்பத்திரிகை பதிவு செய்த தைத் தொடர்ந்து தகவல் மற் றும் பொதுமக்கள் தொடர்புத் துறை ஆணையர் ஆர்.வி. ரவீந்திரன் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.பொதுநலன் கருதி இந்த உத்தரவைப் பிறப்பித்ததாக அவர் தெரிவித்தார். மறு உத் தரவு பிறப்பிக்கும் வரை இத் தடை தொடரும் என்று அவர் தெரிவித்தார்.ஆந்திரப்பிரதேச பத்திரி கையாளர்கள் சங்கம் இது பத்திரிகை சுதந்திரத்தின் மீதான தாக்குதல் என்று தெரி வித்தனர்.
சமூக ஆர்வலர் சோனி சோரியை வெளியேற்றிய எய்ம்ஸ் நிர்வாகம்
புதுதில்லி, மே 11-
உச்சநீதிமன்றத்தின் உத் தரவுக்குப் பின்னரும் சமூக ஆர்வலர் சோனி சோரியை மருத்துவமனையில் சேர்க்க மறுத்த எய்ம்ஸ் மருத்துவ மனை மீது விசாரணை நடத் தப்படும் என்று மாநிலங்கள வையில் அரசு உறுதி அளித்தது.கடந்த ஓராண்டாக காவல் துறையின் காவலிலிருந்த போது சோனி சோரி மிகக் கடுமையாக சித்ரவதை செய் யப்பட்டார் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப் பினர் டி.என்.சீமா மாநிலங் களவையில் தெரிவித்தார்.உச்சநீதிமன்றத்தின் உத்தரவிற்குப் பின்னரும், மே 9ம் தேதி சோனி சோரியை மருத்துவமனையில் அனும திக்க எய்ம்ஸ் மருத்துவ மனை நிர்வாகம் மறுத்து விட் டது. இது யாருடைய உத்தர வின்படி நடந்தது. காவல் துறை காவலில் நடந்த சித்ர வதை மற்றும் பாலியல் பலாத் காரம் குறித்து உயர்மட்ட விசா ரணை நடத்தப் படாதது ஏன் ஏன்று சீமா கேள்வியெழுப் பினார். குற்றமிழைத்த காவல் துறை அதிகாரிகள் மீது நட வடிக்கை எடுக்காததுடன், அவர்களுக்கு வீரவிருது வழங்கப்பட்டுள்ளது. இது ஒரு மாநில விவகாரம் என்று மத்திய அரசு தனது கையைக் கழுவிக் கொள்ள முடியாது என்று சீமா குறிப்பிட் டார்.இதற்கு பதிலளிக்க வேண்டும் என்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பி னர்களின் கோரிக்கைக்கு பழங்குடியினர் விவகாரத் துறை அமைச்சர் கிஷோர் சந்திர தியோ, இப்பிரச்சனை குறித்து விசாரணை நடத்தப் படும் என்று உறுதி அளித்தார்.

Leave A Reply

%d bloggers like this: