பொள்ளாச்சி, மே. 11-பொள்ளாச்சி ஜமீன் ஊத்துக்குளியில் நடைபெற்ற குறைதீர்ப்பு கூட்டத்தில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. பொள்ளாச்சி ஜமீன் ஊத்துக்குளி பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் புதனன்று மக்கள் குறை தீர்ப்பு முகாம் கோவை மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.இந்த முகாமில் மாவட்ட ஆட்சியர் எம்.கருணாகரன் பேசியதாவது:கிராமப்புற பகுதியில் வாழும் ஏழை, எளிய மக்களுக்க பயன்பெரும் வகையில் ஏராளமான நலத்திட்ட உதவிகளை தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். அதனை பெறும் வகையில் அந்தந்த பகுதியில் உள்ள நலத்துறை அதிகாரிகள் மூலம் பயன்பெற வேண்டும். மேலும் இரண்டு பெண் குழந்தைகளுக்கு ரூ. 1 லட்சம் திருமண நல உதவித்தொகை வழங்கிய அரசு தற்போது ஒரு பெண் குழந்தை மட்டும் இருந்தாலும் கூட ரூ. 50 ஆயிரம் வழங்குகிறது. நூறு நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் பணிபுரிவோர் சம்பளம் மற்றும் முதியோர் உதவித் தொகை பெறும் பயனாளிகளின் நலன்கருதி அனைத்து கிராமங்களிலும் வங்கிகள் மூலம் பணம் பெறும் திட்டம் எப்போது வேண்டுமானாலும் பணத்தை எடுத்துக்கொள்ளலாம், வைப்பு நிதியில் இருந்தால் வட்டியும் சேர்ந்து அளிக்கப்படும்.
மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மூலம் 6 பயனாளிகளுக்கு சலவைப் பெட்டி, 5 பேருக்கு புதிய குடும்ப அட்டை, 44 பேருக்கு முதியோர் உதவித் தொகை, 11 பேருக்கு சமூக பாதுகாப்பு திட்டத்தின் மூலம் ரூ. 10 ஆயிரம் ஆகியவற்றை வழங்கினார். நலிந்தோர் நலத்திட்டத்தில் 8 பேருக்கு தலா ரூ.10 ஆயிரம் வழங்கப்பட்டது. ஆதிதிராவிட நலத்துறை மூலமாக 11 பேருக்கு இலவச வீட்டு மனை, இலவச தையல் இயந்திரம் வழங்கினார். மேலும் இந்நிகழ்ச்சியில் ஜமீன் ஊத்துக்குளி பேரூராட்சி துணைத் தலைவர் இளஞ்செழியன் மற்றும் வருவாய் துறையினர் உட்பட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: