சென்னை, மே 11-பொறியியல் படிப்புக் கான விண்ணப்ப வினியோ கம் வெள்ளியன்று தொடங் கியது. பொதுப் பிரிவுக்கு ஜூலை 9ம் தேதி கவுன்சிலிங் தொடங்குகிறது என்று அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் மன்னர் ஜவஹர் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் 554 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் 1 லட் சத்து 90 ஆயிரம் இடங்கள் உள்ளன. இதில் 1 லட்சத்து 60 ஆயிரம் இடங்கள் கவுன் சலிங் மூலம் நிரப்பப்படும். இந்த ஆண்டு பொறியி யல் படிப்புக்காக மொத்தம் 2 லட்சம் விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளன. விண்ணப்ப வினியோகம் வெள்ளியன்று அதிகாலை 6 மணிக்கு தொடங்கியது. இதுகுறித்து துணை வேந்தர் மன்னர் ஜவஹர் கூறியதாவது:-சென்னை அண்ணா பல் கலைக்கழகம், குரோம் பேட்டை எம்ஐடி உள்பட தமிழகம் முழுவதும் 58 மையங்களில் விண்ணப்பம் வழங்கப்படுகிறது. அண் ணா பல்கலையில் மட்டும் 20 கவுன்டர்கள் திறக்கப் பட்டுள்ளன. விண்ணப்பங் கள் வரும் 31ம் தேதி வரை வழங்கப்படும். அன்றே விண்ணப்பங்களை சமர்ப் பிக்க கடைசி தேதி. ஜூன் 20ம் தேதி ரேண்டம் எண் வெளியிடப்படும்.
ஜூன் 24ம் தேதி ரேங்க் பட்டியல் வெளியிடப்படும்.விளையாட்டு வீரர் களுக்கான கவுன்சிலிங் ஜூலை 1ம் தேதி தொடங்கு கிறது. தொழில்படிப்பு மாணவர்களுக்கு ஜூலை 3ம் தேதி முதல் 7ம் தேதி வரை நடக்கும். மாற்றுத் திறனாளிகளுக்கு 8ம் தேதி கவுன்சிலிங் நடக்கும். பொதுப் பிரிவினருக்கான கவுன்சிலிங் ஜூலை 9ம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் 12ம் தேதி வரை நடக்கும். பொறியியல் படிப்புக்கு முதலாண்டில் மொத்தம் 40 வகையான படிப்புகள் உள் ளன. அண்ணா பல்கலைக் கழக கவுன்சிலிங் மூலம் மொத்தம் 1 லட்சத்து 60 ஆயிரம் இடங்கள் நிரப்பப் படும். கடந்த ஆண்டு மொத் தம் 1 லட்சத்து 10 ஆயிரம் இடங்கள் நிரப்பப்பட்டன. 45 ஆயிரம் இடங்கள் காலி யாக இருந்தன. புதிய கல்லூ ரிகளை தொடங்கும் பணி கள் வேகமாக நடந்து வரு கின்றன. எனவே கூடுதல் இடங்கள் கிடைக்க வாய்ப் புள்ளது. மேலும் அண்ணா பல்கலைக்கழக இணைய தளத்தில் முழு தகவல்களை பெற முடியும். இவ்வாறு மன்னர் ஜவ ஹர் கூறினார்.

Leave A Reply

%d bloggers like this: