தரங்கம்பாடி, மே 11-நாகை மாவட்டம் தரங் கம்பாடி வட்டம் டி, மணல் மேடு ஊராட்சி நிர்வாகத் தை பஞ்சாயத்துராஜ் அமைப்பு உருவானது முதல் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சிதான்கையில் வைத்திருந்தது. இந்த ஊராட்சி மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் செல்வாக்குமிக்க பகுதியாகும். இந்நிலையில் கடந்த உள்ளாட்சி தேர்தலில் பூம்பு கார் சட்டமன்ற உறுப்பினர் பவுன்ராஜ், தனது உறவுக் காரரை அதிமுக வேட்பாள ராக போட்டியிட வைத்து நயவஞ்சகமாக, சூழ்ச்சியின் மூலம் பணபலத்தை பயன் படுத்தியும் வைத்து வெற்றி பெற வைத்தார். தொடர்ந்து கம்யூனிஸ்ட் கட்சியின் செல்வாக்கை உடைக்க பல் வேறு நயவஞ்சக முயற்சி யிலும் ஈடுபட்டு வருகிறார். டி. மணல்மேட்டில் அமைந்துள்ள இரண்டு பேருந்து நிலையங்களுக்கு, மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரு மான கோ.பாரதிமோகன் மற்றும் தரங்கம்பாடி தாலு காவின் முக்கிய தலைவர் களில் ஒருவரான எஸ். சிங்காரம் ஆகியோரின் பெயர்கள் சூட்டப்பட்டு நீண்ட காலமாக பயன்பாட் டில் இருந்து வந்தது. தற் போது திடீரென தலைவர் களின் பெயர்களை நீக்கி உள்ளனர். இது மக்கள் மத்தியில் பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியது.இது சம்பந்தமாக ஊராட்சி ஒன்றிய ஆணை யர் மற்றும் அதிகாரிகளுக்கு புகார் மனு அளித்தும் எவ் வித நடவடிக்கை இல்லாத தாலும் மக்கள் தலைவர் களின் உன்னத உழைப்பிற்கு அவமரியாதை செய்த ஊராட்சி நிர்வாகத்தை கண் டித்தும் பேருந்து நிலையத் தில் தலைவர்களின் பெயர் களை பொதுமக்களே எழு தும் நூதன போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டக் குழு உறுப்பினர் ஏ.ரவீச்சந்திரன் தலைமைவகித்தார். வட்டச் செயலாளர் பி.சீனிவாசன் கண்டன உரையாற்றினார். விவசாயிகள் சங்க வட்டச் செயலாளர் டி.சிம்சன், மாற் றுத் திறனாளிகள் சங்க மாவட்டச் செயலாளர் என். செல்வம், டி.கோவிந்தசாமி ஆகியோர் கலந்து கொண் டனர். கட்சித் தலைவர்கள் பேரணியாக சென்று பேருந்து நிலையங்களில் தலைவர்களின் பெயர்களை எழுதினர்.

Leave A Reply

%d bloggers like this: