புதுதில்லி, மே 11-டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கரை இழிவுபடுத்தும் கேலி சித்திரத்தை சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் இடம் பெறச் செய்த விவகாரம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்தக் கேலிச் சித்திரம் பாடப்புத்தகத்திலிருந்து நீக்கப்படும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில்சிபல் உறுதியளித்தார். மத்திய அரசின் சிபிஎஸ்இ பாடத்திட்டத் தில் 11ம் வகுப்பு அரசியல் அறிவியல் பாடத் தில் அம்பேத்கரை இழிவுபடுத்தும் கேலிச் சித்திரம் இடம் பெற்றுள்ளது. இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்தது. நாடாளு மன்றத்தின் இரு அவைகளிலும் வெள்ளி யன்று இந்தப் பிரச்சனை வெடித்தது.மக்களவையில் விடுதலைச் சிறுத்தை கள் கட்சி உறுப்பினர் தொல். திருமாவளவன் இப்பிரச்சனையை எழுப்பினார். இந்தப் புத் தகத்தை உடனடியாகத் திரும்பப் பெறவேண் டும். வெளியீட்டாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத் தினார்.
இப்பிரச்சனைக் குப் பொறுப்பேற்று மத் திய அமைச்சர் கபில் சிபல் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் அவர் கோரினார். சர்ச் சைக்குரிய கார்ட்டூனை பிரதியெடுத்து அவர் உறுப்பினர்களுக்கு வழங்கினார். கட்சி வித்தியாச மின்றி அனைத்து உறுப் பினர்களும் பாடப் புத்த கத்தைத் தயாரித்த என் சிஇஆர்டி செயலைக் கண்டித்தனர்.அவை முன்னவ ரும் நிதியமைச்சருமான பிரணாப் முகர்ஜி விளக்க மளிக்கையில் உறுப்பி னர்களின் உணர்வு களைத் தாம் புரிந்து கொள்வதாகவும் மதிப் பளிப்பதாகவும் கூறினார். 1946 நவம்பர் மாதத்தில் துவங்கி 1949 நவம்பரில் அரசியல் சாசனத்தை உருவாக் கும் பணி முடிவடைந்தது. அம்பேத்கரின் அயர்வற்ற உழைப்பின் காரணமாகவே அரசியல் சாசனம், மிகக்குறுகிய காலத்தில் உருவாக்கப்பட்டது என்றார். அம்பேத்கர் உருவாக்கிய அரசியல் சாசனத்தின் அடிப்படையில் தான் இந்திய ஜனநாயகம் செயல்படுகிறது. அவருடைய பங்களிப்பு இல்லாமல் அரசியல் சாசனத் தை உருவாக்கியிருக்க முடியாது என்றார்.மாநிலங்களவையிலும் இப்பிரச்சனை பெரும்புயலைக்கிளப்பியது. அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் அவையின் மையப்ப குதிக்கு வந்து அம்பேத்கரை இழிவுபடுத்தி யதை எதிர்த்து முழக்கமிட்டனர். இதனால் அவை ஒத்திவைக்கப்பட்டது. மதியம் 2.30 மணிக்கு மீண்டும் அவை கூடியபோதும் கொந்தளிப்பு நீடித்தது.ஆட்சேபகரமான அந்த கேலிச்சித் திரத்தை நீக்கும்வரை அவையை நடத்த விட மாட்டோம் என்றார் பகு ஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி. சமாஜ்வாதி, ராஷ்ட்ரீய ஜனதாதளம், அதிமுக, சிபிஐ மற்றும் சிபிஎம் உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். காங்கிரசின் கூட் டணிக்கட்சியான திரி ணாமுல் காங்கிரசும் எதிர்ப்பில் சேர்ந்து கொண்டது. மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் கபில் சிபல் பேசும் போது, சர்ச்சைக்குரிய அந்தக் கார்ட்டூனைத் தாமும் பார்த்ததாகவும் உடனடியாக அந்தக் கார்ட்டூனை நீக்குமாறு உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இதே போன்று பல ஆட்சேப கரமான பகு திகள் இடம்பெற்றுள் ளதாகவும் ஆய்வுக்குப் பின் அவை நீக்கப்படும் என்றும் அவர் தெரிவித் தார்.

தேசிய அவமானம்
டி.கே.ரங்கராஜன் கண்டனம்
மாநிலங்களவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் டி.கே. ரங்க ராஜன் பேசும்போது, டாக்டர் அம்பேத்கர் குறிப்பிட்ட பகுதி ,குறிப்பிட்ட பிரிவு மக்க ளின் தலைவரல்ல. அவர் ஒரு தேசியத் தலைவர் அவரை இழிவுபடுத்தும் வகையிலான கேலிச்சித்திரம் மத்திய அரசு பாடத்திட்டத்தில் இடம்பெற்றிருப்பது ஒரு தேசிய அவமானம். இது வன்மை யாகக் கண்டிக்கத்தக்கது. அரசியல் சாசனத்தை உருவாக்குவதில் டாக்டர் அம்பேத்கருக்கு மகத்தான பங்கு உள்ளது. விஷமத்தனமான வகையில் பாடப்புத் தகத்தைத் தயாரித்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆட்சே பகரமான அந்தக் கார்ட்டூன் உடனடியாக நீக்கப்படவேண்டும் என்று வலியுறுத் தினார்.

Leave A Reply

%d bloggers like this: