நாமக்கல், மே 11-பணி நீக்க காலத்தை பணிக்காலமாக அறிவிக்கக் கோரி தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் நாமக்கல் அண்ணாசிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும். இறந்த சாலைப்பணியாளர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்கிட வேண்டும். சீருடை மற்றும் ஆபத்துப்படி வழங்க வேண்டும். சாலை பராமரிப்பு பணிகளை அரசே தொடர்ந்து நடத்திட வேண்டும். தனியாருக்கு சாலைகளை ஒப்படைப்பதை கைவிட வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் பாலசுப்பிரமணியம் தலைமைவகித்தார். மாநில துணைத் தலைவர் விஜயகுமார் சிறப்புரையாற்றினார். மாவட்டச் செயலாளர் தனசேகரன், பாலகிருஷ்ணன், கனகராஜ் மற்றும் ஜாகீர் உசேன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டத்தின் நிறைவாக பொருளாளர் பார்த்தீபன் நன்றி கூறினார்.

Leave A Reply

%d bloggers like this: