சென்னை, மே 11 -தமிழ்நாட்டில் தொழில் துவங்க வரும் பன்னாட்டு நிறுவனங்களுடன் அரசு செய்துகொள்ளும் புரிந் துணர்வு ஒப்பந்தங்களை வெளியிடு வதோடு, தொழிற்சங்கம் அமைக்கும் உரிமையை நிலைநாட்ட வேண்டு மென்று சிபிஎம், தேமுதிக கட்சிகள் வலியுறுத்தின.சட்டப்பேரவையில் வெள்ளி யன்று (மே 11) தொழிலாளர் நலத் துறை மானிய கோரிக்கை மீது நடந்த விவாதத்தின்போது பன்னாட்டு நிறுவனங்களில் தொழிற் சங்கம் அமைக்கும் உரிமை மறுக்கப்படுவது குறித்து சூடான விவாதம் நடை பெற்றது.நாகை மாலி (சிபிஎம்): தொழிற் சங்கம் அமைக்கப்படும் உரிமை சட்டத்தில் உறுதி செய்யப்பட்டுள் ளது. இது தொழிலாளர்களின் அடிப் படை உரிமையாகும். தமிழகத்தில் தொழிற்சங்கம் அமைக்கும் உரிமை குறிப்பாக தனியார் நிறுவனங்களில் கடந்த 5 ஆண்டு கால திமுக ஆட்சியில் மிகத் தீவிரமாக மறுக்கப்பட்டது. பன்னாட்டு நிறுவனங்கள் தொழிற் சங்கத்தை அனுமதிப்பது இல்லை என்பதை கொள்கையாகவே அறிவித்து செயல்பட்டன. இதை அரசியல் சட்டம் மற்றும் சட்டத்தின் ஆட்சிக்கு விடப்படுகிற சவாலாகவே கருத வேண்டும். இப்போதும் தமிழ கத்தில் வந்திருக்கிற பன்னாட்டு தொழிற்சாலைகளில் மறைமுகமாக சங்கம் அமைக்கும் உரிமை மறுக்கப் படுகிறது.
பழிவாங்கல் நடைபெறுகி றது. எனவே தொழிற்சங்க அங்கீகா ரத்தை சட்டத்தின் மூலம் கட்டாய மாக்கும் வகையில் சட்டம் இயற்ற வேண்டும்.கடந்த திமுக ஆட்சியில் தொழிற் சங்க உரிமைக்காக ஜனநாயக ரீதியில் போராடிய தொழிலாளர்கள் மீதும், தொழிற்சங்க தலைவர்கள் மீதும் கொலை முயற்சிகள் உள்ளிட்ட பல் வேறு வழக்குகள் போடப்பட்டு கைது செய்யப்பட்டு சிறையிலடைக் கப்பட்டனர். எங்களுடைய சட்ட மன்றக்குழுத் தலைவர் அ. சவுந்தரரா சனை ஃபாக்ஸ்கான் என்ற வெளி நாட்டு நிறுவனத்தில் சங்கம் அமைக்க போராடியதற்காக கொடிய குற்றவாளி போல் கைவிலங்கிட்டு நீதிமன்றத் திற்கு அழைத்துச் சென்றார்கள். சட்ட மன்றத்தில் பேசவிடாமல் வாய்விலங் கும் போட்டார்கள். திமுக ஆட்சியில் புனையப்பட்ட இந்த உண்மைக்கு மாறான வழக்கை இந்த அரசு திரும்பப் பெற வேண்டும்.சி.எச்.சேகர் (தேமுதிக): பன் னாட்டு நிறுவனங்களில் தொழிற்சங் கம் அமைக்க, பெயர் பலகை வைக்க அனுமதி மறுக்கின்றனர். சிறப்பு பொருளாதார மண்டலங்களில் உள்ள நிறுவனங்களுக்கு ஏராளமான சலுகை அளிக்கப்படுகிறது. ஆனா லும், தொழிற்சங்க உரிமையை மறுக் கின்றனர். தொழிலாளர்கள் தங்கள் உரிமையை இழக்கின்றனர்.அமைச்சர் சி.த.செல்லப்பாண் டியன்: தொழிற்சங்க சட்டம்-1926ன் படி சங்கம் அமைக்க உரிமை உள் ளது. அதில், சங்க அங்கீகாரம் அளிப் பது குறித்து இல்லை. எனவே, அச் சட்டத்தை திருத்த நடவடிக்கை எடுக் கப்படும்.அமைச்சர் சி.வி.சண்முகம்: பன்னாட்டு நிறுவனங்களுக்கு 10-15 ஆண்டுகளுக்கு வரிச்சலுகை அளிக்க வில்லை. வரியை காலம் தாழ்த்தி வசூலிக்கப்படுகிறது.அ.சவுந்தரராசன் (சிபிஎம்): பன்னாட்டு, உள்நாட்டு நிறுவனங்கள் வரிச்சலுகை அனுமதிக்கப்பட்ட 10-15 ஆண்டுகளுக்குள் கம்பெனியை மூடி விட்டு சென்றால், அந்த வரியை வசூ லிக்க நடவடிக்கை உள்ளதா?தொழில்துறை அமைச்சர் கே.தங்கமணி: ஹூண்டாய் நிறு வனத்திற்கு அளிக்கப்பட்ட 15 ஆண்டு கால சலுகை அடுத்த ஆண்டோடு முடிகிறது. அதன்பிறகு வரி வசூலிக் கப்படும்.அமைச்சர் சி.வி.சண்முகம்: அனு மதி அளிக்கப்பட்ட காலத்திற்கு முன் பாக ஒரு நிறுவனம் மூடப்பட்டால், அந்நிறுவனத்தின் சொத்துக்கள் முடக்கப்படும். அச்சொத்துக்களை விற்று வருகிற வருவாயில் அரசின் வரியை எடுத்துக் கொண்டு மீதித் தொகை அந்நிறுவனத்திற்கு வழங்கப் படும்.கே.பாலபாரதி (சிபிஎம்): பல்வேறு நிறுவனங்கள் அரசியல் சட்டத்தை மதிக்காமல் 12 மணி நேரம் வரை வேலை வாங்குகின்றனர். குறைந் தபட்ச கூலி எவ்வளவு தருகிறார்கள் என்பதை கூட அரசுக்கு தெரிவிப்ப தில்லை. சட்டத்தை மீறும் நிறுவனங் கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?அமைச்சர் சி.த.செல்லப்பாண் டியன்: இத்தகைய பிரச்சனை எதுவும் அரசின் கவனத்திற்கு வரவில்லை. எந்த நிறுவனத்தில் விதிமீறல் நடக்கிறது என்று குறிப்பிட்டு கூறினால் நட வடிக்கை எடுக்கப்படும்.கே.பாலகிருஷ்ணன் (சிபிஎம்): பன்னாட்டு, பெரு நிறுவனங்களுடன் அரசு செய்து கொள்ளும் புரிந்து ணர்வு ஒப்பந்தங்களை சட்டமன்றத் தில் அல்லது பொதுவாக வெளியிட அரசு முன் வருமா?சி.எச்.சேகர்: பன்னாட்டு நிறுவ னங்களில் தொழிற்சங்கம் அமைக்க அனுமதிக்க வேண்டும்.அமைச்சர் சி.த.செல்லப்பாண்டி யன்: தொழிற்சங்கம் அமைக்க அரசு தடையாக இல்லை.அ.சவுந்தரராசன்: தொழிற்சங்கம் அமைக்க அரசு தடையாக இல்லை. முதலாளிகள்தான் தடையாக இருக் கிறார்கள். போராடினால் பழிவாங்கு கிறார்கள். அப்போது தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளிடம் முறை யிட்டால் நியாயம் கிடைப்பதில்லை. தொழிலாளர்கள் தொழிற்சங்க உரி மையை அனுபவிக்க தடை இருந்தால், தொழிற்சாலை ஆய்வாளரை கொண்டு தலையிட வேண்டும்.அமைச்சர் கே.தங்கமணி: கடந்த திமுக ஆட்சியில் உறுப்பினர் சவுந்தர ராசன் கையில் விலங்கு போட்டு போலீசார் அழைத்துச் சென்றனர். அப்போது தற்போதைய முதலமைச் சர் உங்களுக்காக குரல் கொடுத்தார்.சின்னசாமி (அதிமுக): பன் னாட்டு தொழிற்சாலைகளில் சங்கம் வைக்க அனுமதிக்கவில்லை என்று இடதுசாரி உறுப்பினர்கள் தெரிவித் தார்கள்.
இது கடந்தகால திமுக ஆட்சி யின் நிலையாகும். தற்போது ஹூண் டாய், பாக்ஸ்கான் போன்ற பன் னாட்டு நிறுவனங்களில் அண்ணா தொழிற்சங்கம் தொடங்கப்பட்டுள் ளது. நிர்வாகமும் அதனை ஏற்றுக் கொண்டுள்ளது. எந்தவித பழிவாங் கல் நடவடிக்கையும் இல்லை.பாக்ஸ்கான் நிறுவனத்தில் தொழிற்சங்கம் அமைத்ததற்காக சிஐ டியு தலைவர் அ.சவுந்தரராசனுக்கு கைவிலங்கிட்ட கொடுங்கோல் ஆட்சிதான் திமுக ஆட்சி.அ.சவுந்தரராசன்: நோக்கியா நிறுவனத்தில் அண்ணா தொழிற்சங் கத்தை அமைத்த ஒரே காரணத்திற் காக அதன் நிர்வாகிகள் வெளி மாநி லங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டு பழிவாங்கப்பட்டனர். மேலும் 30 பேர் வேலை இழந்துள்ளனர்.இவ்வாறு விவாதம் நீண்டு கொண்டே சென்றதால் தொழிற்சங் கம் அமைத்ததற்காக கடந்த ஆட்சியில் அடக்குமுறையை ஏவிவிட்டு எந்த அளவுக்கு தோழர் சவுந்தரராசன் அவ மானப்படுத்தப்பட்டார் என்பது இதி லிருந்து தெளிவாகிறது என்று பேர வைத் தலைவர் முற்றுப்புள்ளி வைத் தார்.

Leave A Reply

%d bloggers like this: