திருவாரூர், மே 11-100 நாள் வேலைத்திட் டத்தை முறைப்படுத்தக்கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு தங்களின் எதிர்ப்பை தெரிவிப்பது திருவாரூர் மாவட்டத்தில் அன்றாட நிகழ்வாகி விட்டது. கொரடாச்சேரி ஒன்றியம் காட்டூரைத்தொடர்ந்து வெள்ளிக்கிழமை அன்று திருத்துறைப்பூண்டி ஒன்றியம் வரம்பியம் ஊராட்சி மடப்புரம் கடைவீதியிலும் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.விவசாயத் தொழிலாளர் சங்கத் தலைவர்கள் ஆர்.வேதையன், டி.எஸ்.மணியன், மதி(சிபிஎம்) ஆகியோர் தலைமையில் 300க்கும் மேற்பட்டோர் சாலையில் அமர்ந்து கோரிக்கைகளை முழங்கினர். அரசு அறிவித்துள்ள 132 ரூபாய் கூலிக்கு பதிலாக 80 ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டதால் மக்கள் ஆவேசமடைந்து இந்த அறப்போராட்டத்தில் ஈடுபட்டனர். காலை 9.30 மணியளவில் தொடங்கிய சாலை மறியல் 11 மணியளவில் முடிவுக்கு வந்தது. இதனால் மன்னார்குடி – திருத்துறைப்பூண்டி பிரதான சாலையில் போக்குவரத்து மிகவும் பாதிக்கப்பட்டது. இந்த சாலைமறியலை கேள்விப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்தி, வட்டாட்சியர் மற்றும் காவல்துறை உயரதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டக்குழுவினரோடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது சம்பளத்தைக்குறைக்காமல் வழங்குவதற்கு அரசுத்தரப்பில் உத்திரவாதம் அளிக்கப்பட்டது. இந்த உறுதிமொழியை ஏற்று சாலைமறியல் போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது.
போராட்டத்தின் காரணமாக சுமார் 2 மணிநேரம் மடப்புரம் பகுதியில் பரபரப்பு நிலவியது.சாலைமறியல் போராட்டம் நடத்தினால்தான் அதிகாரிகள் மக்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்கும் நிலைஉள்ளதால் இந்த சாலை மறியல் போராட்டம் தொடர்கதையாகி வருகிறது.சாலைமறியல் போராட்டம் என்பது தொடரும் சூழ்நிலையில் இருப்பதால் 100 நாள் வேலைத்திட்டத்தை உடனடியாக திருவாரூர் மாவட்டத்தில் நடைமுறைப்படுத்த வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி செயலர்கள் ஆகியோர் அடங்கிய சிறப்புக்கூட்டத்தை உடனடியாக நடத்தி இத்திட்டத்தை முறைகேடு இல்லாமல் சிறப்பாக நடத்தி கிராமப்புற சொத் துக்களை பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது. தற்போதைய ஆட்சியர் இப்பிரச்சனையில் உடனடியாக தலையிடுவாரா?

Leave A Reply

%d bloggers like this: