வழக்கறிஞரிடம் தகராறு:தொழிலதிபர் மீது வழக்கு
தூத்துக்குடி, மே 11 -கோவில்பட்டி லட்சுமி மில் மேலக் காலனியைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் அழ கர்சாமி (40). இவருக்கும் கோவில்பட்டியைச் சேர்ந்த தொழில் அதிபர் சீனிவாசன் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சீனிவாச னின் நிறுவனத்தில் வேலை பார்க்கும் மேலாளர் வீடு, வழக்கறிஞர் அழகர்சாமி வீட்டருகே இருப்பதாக தெரிகிறது.அவரது வீட்டிற்கு சீனி வாசனின் டிரைவர் சுப்பையா சென்று விட்டு காரில் திரும்பி கொண்டியிருந்த போது மர்ம ஆசாமி வழி மறித்து தாக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தனது உரிமையாளர் சீனி வாசனிடம், டிரைவர் சுப் பையா தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து தொழில் அதிபர் சீனிவாசன், அவரது நண்பர் சுதாகர், டிரைவர் சுப்பையா ஆகிய 3பேரும் வழக்கறிஞர் அழகர்சாமி யிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து வழக்கறி ஞர் அழகர்சாமி கொடுத்த புகாரின் பேரில் கோவில் பட்டி மேற்கு காவல்நிலைய ஆய்வாளர் செல்வராஜ் வழக்கு பதிவு செய்து டிரை வர் சுப்பையாவை கைது செய்தார்.மேலும் தொழில் அதிபர் சீனிவாசன், அவரது நண்பர் சுதாகர் ஆகிய இரு வரையும் தேடிவருகின்றனர்.

வளர்ச்சித்துறை அலுவலர்கள் நாகர்கோவிலில் தர்ணா
நாகர்கோவில், மே 11 -ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கம் சார் பில் நாகர்கோவிலில் ஆட்சி யர் அலுவலகம் முன் தர் ணா நடைபெற்றது.இளநிலை உதவியாளர் களுக்கு இணையான ஊதி யத்தை ஊராட்சி செயலர் களுக்கு வழங்க வேண்டும். ஊராட்சி செயலர்களுக்கு பணிவிதிகளை உருவாக்கி அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அனைத்துச் சலுகைகளையும் வழங்க வேண்டும். பணிநீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப் பணியாளர்களை மீண்டும் பணியமர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி இந்த தர்ணா நடைபெற்றது.மாவட்டத் தலைவர் ஒய். வர்கீஸ் தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் யூ. சுமதி தர்ணாவைத் தொடங்கி வைத்தார். அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் சி.ஆர். ராஜகுமார், செய லாளர் சி.எஸ். கிறிஸ்டோ பர், நகராட்சிப் பணியாளர் சங்க மாவட்டத் தலைவர் லீடன்ஸ்டோன், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாவட்டச் செயலா ளர் எஸ். சேகர், துணைத் தலைவர் ராஜேந்திரன், வரு வாய்த் துறை அலுவலர்கள் சங்க மாவட்டச் செயலா ளர் மூர்த்தி ஆகியோர் பேசினர்.

Leave A Reply