சேலம், மே 11 –
நெதர்லாந்து விசா மையம் சென்னையில் துவங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து நெதர்லாந்து நாட்டிற்கு செல்ல துவங்கப்பட்டுள்ள 4வது மையம் இதுவாகும். வி.எப்.எஸ் என்ற நிறுவனம் இந்த சேவையை வழங்க வுள்ளது. இந்த நிறுவனம் அவுட்சோர்சிங் துறையில் முன்னணி நிறுவனமாகும். இதே சேவையை பல நாடுக ளில் வழங்கி வருகிறது. சென்னையில் இந்த மையம் பழைய எண் 2, புதிய எண்3 சதாசிவம் தெரு, கோபால புரம், சென்னை600086 என்ற முகவரில் செயல்படு கிறது. நெதர்லாந்தில் குறு கிய காலம் தங்குவதற்கான விசாக்களை இந்த சேவை மையம் பெற்றுக்கொள் ளும். சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் வசிப் போர் தங்களது விண்ணப் பங்களை இந்த மையத்தில் வழங்கலாம் என்று அதன் செய்திக்குறிப்பு தெரிவிக் கிறது.மையத்தை எளிதில் தொடர்பு கொள்ள இணை யதள வசதி,விசா குறித்த விவரங்கள், கட்டணம், மின் னஞ்சல் மூலம் உடனுக்கு டன் தகவல்களை வழங்கும் வசதி உள்ளிட்ட வசதி களை இந்த சேவை மையம் கொண்டுள்ளது.
சுமங்கலி திட்டத்தை அரசு ஏற்காது
சென்னை, மே 11 –
தொழிலாளர் நலத் துறை மானியக் கோரிக்க மீதான விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய தேமுதிக உறுப்பினர் சி.எச். சேகர், சுமங்கலி திட்டத்தை ஒழிப் பதற்காக தமிழக அரசு சட் டம் கொண்டு வந்து, குடி யரசு தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதற் கான ஒப்புதலை விரைந்து பெற வேண்டும் என்றார். இதற்கு பதிலளித்த தொழி லாளர் நலத்துறை அமைச் சர் சி.த.செல்லப்பாண்டி யன், சுமங்கலி திட்டத்திலி ருந்து இளம் பெண்களை பாதுகாக்க கடந்த ஆட்சி யில் சட்டம் கொண்டு வரப் பட்டது. அப்பரண்டீஸ்க ளின் பணிக்காலம் 3 ஆண்டு என்பதை 6 மாதங்களாக குறைக்கவும், மொத்த தொழி லாளர்களில் அப்பரண்டீஸ் கள் 20விழுக்காட்டிற்கு மேல் இருக்கக் கூடாது எனவும் அதில் உள்ளது. இந்த சட் டம் தொடர்பாக மத்திய அரசு 22..2.2012 அன்று கூடுதல் தகவல்களை கேட்டு கடிதம் அனுப்பி உள்ளது. அதற்கு பதில் அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் எம். ஆறுமுகம் சுமங்கலி திட் டத்தை அரசு ஏற்றுக் கொள்கிறதா? என்றார்.சுகங்கலி திட்டத்தை அரசு ஏற்றுக் கொள்ளவில்லை அமைச்சர் பதிலளித்தார்.
நடனப்போட்டி இளைஞர்கள் ஆர்வம்
சேலம், மே 11 –
பிரபல குளிர்பான நிறு வனமான செவன் அப் நிறு வனம் ‘எனக்காக நடன மாடுங்கள் – லெமன் பட்டா ளம் என்ற நடனப் போட் டியை நடத்தவுள்ளது. இந்த போட்டி சேலத்தில் பிருந் தாவன் சாலையில் உள்ள பொன்னுசாமி திருமண மண்டபத்தில் சனி, ஞாயிற் றுக்கிழமைகள் (மே.12,13) நடைபெறவுள்ளன.இந்தப்போட்டியில் சேலம் மற்றும் அதனை சுற் றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான இளைஞர்கள் கலந்துகொண்டு தங்களது நடனத்திறமையை வெளிப் படுத்தவுள்ளனர். விடுமுறை காலம் என்பதால் பள்ளி கல்லூரி மாணவர்கள் இந்த போட்டியில் ஆர்வத்துடன் கலந்துகொள்கிறார்கள்.இந்தபோட்டியின் மொத்த பரிசுத் தொகை ரூ.51லட்சமாகும். இதை வெல்ல இளைஞர்களிடையே கடும் போட்டி ஏற்பட்டுள் ளது. இறுதிப்போட்டி சென் னையில் இம் மாத இறுதி யில் நடைபெறவுள்ளது.

Leave A Reply